• May 02 2024

விகாரையில் மகிந்தவுடன் இரகசிய சந்திப்பு நடத்திய முக்கிய தேரர்கள் - ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு?

Chithra / Feb 25th 2024, 8:30 am
image

Advertisement

 

தேசிய வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் முன்னணி தேரர்கள் குழுவொன்று கேட்டுக்கொண்டது. 

மகாநாயக்க தேரர்களும் இது தொடர்பில் தமது கொள்கையை வெளிப்படுத்தியுள்ளனர். 

போரில் நாட்டைக் காப்பாற்றிய தலைவர் என்ற ரீதியில் அதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது மகிந்த ராஜபக்சவின் பொறுப்பாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாத கொழும்பில் உள்ள பிரதான விகாரை இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடலில் இந்த விடயங்கள் குறித்து தேரர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தனர். 

முன்னாள் ஜனாதிபதியுடன், பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த 8 முக்கியஸ்தர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். 

அத்துடன், இதில் கலந்துகொண்ட தேரர்கள் நாட்டின் முன்னணி மாநாயக்க தேரர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

கட்டுநாயக்க, மத்தள, இரத்மலானை விமான நிலையங்கள் போன்ற தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான அரச நிறுவனங்களை வெளிநாட்டவர்களுக்கு மாற்றுவது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தேரர்கள் முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த கலந்துரையாடலில் சுமார் 10 முக்கிய தேரர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர்களுடன் இணைந்து கொண்டதுடன், 

கடந்த பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுஜன பெரமுன கட்சிக்கே மக்கள் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதால் அதன் தலைவர்கள் இந்த நிலையைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

விகாரையில் மகிந்தவுடன் இரகசிய சந்திப்பு நடத்திய முக்கிய தேரர்கள் - ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு  தேசிய வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் முன்னணி தேரர்கள் குழுவொன்று கேட்டுக்கொண்டது. மகாநாயக்க தேரர்களும் இது தொடர்பில் தமது கொள்கையை வெளிப்படுத்தியுள்ளனர். போரில் நாட்டைக் காப்பாற்றிய தலைவர் என்ற ரீதியில் அதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது மகிந்த ராஜபக்சவின் பொறுப்பாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாத கொழும்பில் உள்ள பிரதான விகாரை இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடலில் இந்த விடயங்கள் குறித்து தேரர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தனர். முன்னாள் ஜனாதிபதியுடன், பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த 8 முக்கியஸ்தர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். அத்துடன், இதில் கலந்துகொண்ட தேரர்கள் நாட்டின் முன்னணி மாநாயக்க தேரர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்க, மத்தள, இரத்மலானை விமான நிலையங்கள் போன்ற தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான அரச நிறுவனங்களை வெளிநாட்டவர்களுக்கு மாற்றுவது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தேரர்கள் முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கலந்துரையாடலில் சுமார் 10 முக்கிய தேரர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர்களுடன் இணைந்து கொண்டதுடன், கடந்த பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுஜன பெரமுன கட்சிக்கே மக்கள் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதால் அதன் தலைவர்கள் இந்த நிலையைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement