• Nov 22 2024

கெராேயின் வழக்கு - குற்றத்தை நிருபிக்க தவறியமையால் சந்தே நபரை விடுவித்து தீர்ப்பளித்தார் நீதிபதி இளஞ்செழியன்!

Tamil nila / Nov 21st 2024, 7:59 pm
image

1984 ஆண்டு 13 ம் இலக்க நச்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான ஔடத வகைகள் சட்டத்தால் திருத்தப்பட்ட  நச்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான ஓளடத வகைகள்  கட்டளை சட்டத்தின் கீழ்  போதைப்பொருள் சட்டத்தின் 54 அ   பிரிவு போன்ற குற்றங்களுக்காக தீங்கு விளைவிக்கும் கெரோயின் 16 கிராம் 40 மில்லி கிராம் பாேதைப் பாெருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் உடமையில் வைத்திருந்து வியாபாரம் செய்தமை என்று குற்றஞ்சாட்டப்பட்ட  நபரின் குற்றச்சாட்டை நிரூபிக்க தவறியமையால் குற்றமற்றவர் என தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால்  விடுவிக்கப்பட்டார்.

  வவுனியா தரணிக்குளம் காத்தார் சின்னக்குளத்தை சேர்ந்த தியாகராஜா கிரிசாந் ஆகிய சந்தேக நபரே இவ்வாறு விடுவிக்கப்பட்டார். 

கடந்த 2020 ஆண்டு ஆவணி மாதம் வவுனியா போதைத் தடுப்பு பிரிவினரால் தீங்கு விளைவிக்க கூடிய கெரோயின் 16 கிராம் 40 மில்லி கிராம் உடமையில் வைத்திருந்தார் மற்றும் உடமையில் வைத்திருந்து வியாபாரம் செய்தார் என்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் வவுனியா நீதவான் நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

குறித்த வழக்கு தொடர்பில்  நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிணை விண்ணப்பம் கோரப்பட்ட போதும் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பிணை வழங்கும் நியாஜாதிக்கம் இந் நீதிமன்றத்துக்கு இல்லை என்பதாலும் உயர் நீதிமன்றத்துக்கு  செல்ல வேண்டிய  பிணை  விண்ணப்பம் என்பதாலும் பிணை நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை இடம்பெற்று பின்பு இரசாயன பகுப்பாய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டு சட்டமா  அதிபர் திணைக்கள ஆலோசனைக்கு அனுப்பப்பட்டது.

குறித்த எதிரிக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நிறைவுபெற்று  2022.10.20 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இரண்டு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய  குற்றப் பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 

10 கிராம் 0.6 மில்லிகிராம் அளவினைக் கொண்ட கெரோயினை தன் உடமையில் வைத்திருந்தார் மற்றும் உடமையில் வைத்து வியாபாரம் செய்தார் என்று குற்றஞ்சாட்டு வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு  விசாரணைகள் இடம்பெற்று  வந்த நிலையில்  மன்று கேட்டதற்கமைய எதிரி தான் குற்றவாளி இல்லை என மன்றுக்கு  தெரிவித்தார்   

மன்று கேட்டதற்கமைய விளக்கம் நடைபெற்றது. எதிரி சார்பாக  சிரேஸ்ட சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா மற்றும் சட்டத்தரணி அக்மல் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக ஆறுமுகம் தனுஷ்காந் ஆஜராகி விளக்கம் நடைபெற்றது.

1984ஆண்டு 13 ம் இலக்க நச்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான ஓளடத வகைகள் (திருத்த) சட்டத்தால் திருத்தப்பட்ட  நச்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான ஓளடத வகைகள்  கட்டளை சட்டத்தின் கீழ்  போதைப்பொருள் சட்டத்தின் 54 அ   பிரிவு போன்ற  குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு  குற்றம் புரிந்துள்ளதான எதிரிக்கு  எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச தரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்துக்கு அப்பால் நியாயமான ஆதாரங்களை நிரூபிக்க கூடிய குற்றச்சாட்டுக்களை எம்பிக்க தவறியமையால்  இன்றையதினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது. 

அதற்கமைய தீர்ப்பை அறிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எதிரியை குற்றமற்றவர் என விடுவித்து தீர்ப்பளித்தார். 

குறித்த வழக்கில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இரண்டு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப் பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 

10 கிராம் 0.6 மில்லிகிராம் அளவினைக் கொண்ட கெரோயினை தன்  உடமையில் வைத்திருந்தார் மற்றும்  உடமையில் வைத்து வியாபாரம் செய்தார் என்று குற்றஞ்சாட்டு வழக்கு  தவிர்ந்து எவ்விதமான சான்றிதழ்களும் வழக்கு தொடுனரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசதரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்துக்கு அப்பால்  எம்பிக்க தவறியுள்ளதாக நீதிபதி மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதுடன் அரச தரப்பின் நியாயமான சந்தேகங்களிற்கு அப்பால் தவறு இழைக்கப்படவில்லை என்ற அடிப்படையில் 1984 ஆண்டு 13 ம் இலக்க நச்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான ஔடத வகைகள் சட்டத்தால் திருத்தப்பட்ட  நச்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான ஓளடத வகைகள்  கட்டளை சட்டத்தின் கீழ்  போதைப்பொருள் சட்டத்தின் 54 அ   பிரிவு போன்ற  குற்றங்களுக்கான கட்டளை சட்டத்தின் பிரகாரம் தீர்ப்பளிக்கப்பட்டு எதிரி குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.


கெராேயின் வழக்கு - குற்றத்தை நிருபிக்க தவறியமையால் சந்தே நபரை விடுவித்து தீர்ப்பளித்தார் நீதிபதி இளஞ்செழியன் 1984 ஆண்டு 13 ம் இலக்க நச்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான ஔடத வகைகள் சட்டத்தால் திருத்தப்பட்ட  நச்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான ஓளடத வகைகள்  கட்டளை சட்டத்தின் கீழ்  போதைப்பொருள் சட்டத்தின் 54 அ   பிரிவு போன்ற குற்றங்களுக்காக தீங்கு விளைவிக்கும் கெரோயின் 16 கிராம் 40 மில்லி கிராம் பாேதைப் பாெருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் உடமையில் வைத்திருந்து வியாபாரம் செய்தமை என்று குற்றஞ்சாட்டப்பட்ட  நபரின் குற்றச்சாட்டை நிரூபிக்க தவறியமையால் குற்றமற்றவர் என தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால்  விடுவிக்கப்பட்டார்.  வவுனியா தரணிக்குளம் காத்தார் சின்னக்குளத்தை சேர்ந்த தியாகராஜா கிரிசாந் ஆகிய சந்தேக நபரே இவ்வாறு விடுவிக்கப்பட்டார். கடந்த 2020 ஆண்டு ஆவணி மாதம் வவுனியா போதைத் தடுப்பு பிரிவினரால் தீங்கு விளைவிக்க கூடிய கெரோயின் 16 கிராம் 40 மில்லி கிராம் உடமையில் வைத்திருந்தார் மற்றும் உடமையில் வைத்திருந்து வியாபாரம் செய்தார் என்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் வவுனியா நீதவான் நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பில்  நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிணை விண்ணப்பம் கோரப்பட்ட போதும் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பிணை வழங்கும் நியாஜாதிக்கம் இந் நீதிமன்றத்துக்கு இல்லை என்பதாலும் உயர் நீதிமன்றத்துக்கு  செல்ல வேண்டிய  பிணை  விண்ணப்பம் என்பதாலும் பிணை நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை இடம்பெற்று பின்பு இரசாயன பகுப்பாய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டு சட்டமா  அதிபர் திணைக்கள ஆலோசனைக்கு அனுப்பப்பட்டது.குறித்த எதிரிக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நிறைவுபெற்று  2022.10.20 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இரண்டு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய  குற்றப் பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 10 கிராம் 0.6 மில்லிகிராம் அளவினைக் கொண்ட கெரோயினை தன் உடமையில் வைத்திருந்தார் மற்றும் உடமையில் வைத்து வியாபாரம் செய்தார் என்று குற்றஞ்சாட்டு வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு  விசாரணைகள் இடம்பெற்று  வந்த நிலையில்  மன்று கேட்டதற்கமைய எதிரி தான் குற்றவாளி இல்லை என மன்றுக்கு  தெரிவித்தார்   மன்று கேட்டதற்கமைய விளக்கம் நடைபெற்றது. எதிரி சார்பாக  சிரேஸ்ட சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா மற்றும் சட்டத்தரணி அக்மல் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக ஆறுமுகம் தனுஷ்காந் ஆஜராகி விளக்கம் நடைபெற்றது.1984ஆண்டு 13 ம் இலக்க நச்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான ஓளடத வகைகள் (திருத்த) சட்டத்தால் திருத்தப்பட்ட  நச்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான ஓளடத வகைகள்  கட்டளை சட்டத்தின் கீழ்  போதைப்பொருள் சட்டத்தின் 54 அ   பிரிவு போன்ற  குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு  குற்றம் புரிந்துள்ளதான எதிரிக்கு  எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச தரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்துக்கு அப்பால் நியாயமான ஆதாரங்களை நிரூபிக்க கூடிய குற்றச்சாட்டுக்களை எம்பிக்க தவறியமையால்  இன்றையதினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது. அதற்கமைய தீர்ப்பை அறிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எதிரியை குற்றமற்றவர் என விடுவித்து தீர்ப்பளித்தார். குறித்த வழக்கில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இரண்டு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப் பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 10 கிராம் 0.6 மில்லிகிராம் அளவினைக் கொண்ட கெரோயினை தன்  உடமையில் வைத்திருந்தார் மற்றும்  உடமையில் வைத்து வியாபாரம் செய்தார் என்று குற்றஞ்சாட்டு வழக்கு  தவிர்ந்து எவ்விதமான சான்றிதழ்களும் வழக்கு தொடுனரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசதரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்துக்கு அப்பால்  எம்பிக்க தவறியுள்ளதாக நீதிபதி மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதுடன் அரச தரப்பின் நியாயமான சந்தேகங்களிற்கு அப்பால் தவறு இழைக்கப்படவில்லை என்ற அடிப்படையில் 1984 ஆண்டு 13 ம் இலக்க நச்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான ஔடத வகைகள் சட்டத்தால் திருத்தப்பட்ட  நச்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான ஓளடத வகைகள்  கட்டளை சட்டத்தின் கீழ்  போதைப்பொருள் சட்டத்தின் 54 அ   பிரிவு போன்ற  குற்றங்களுக்கான கட்டளை சட்டத்தின் பிரகாரம் தீர்ப்பளிக்கப்பட்டு எதிரி குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement