சில அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் சிறுநீரக விற்பனை மோசடி இடம்பெறுவதாகச் சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி சில விசேட வைத்தியர்களின் உதவியுடன் பெறப்பட்ட சிறுநீரகம் 4 மில்லியன் ரூஉபா வரை விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் பழுதடைந்த கதிரியக்க இயந்திரங்கள் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்று அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவற்றில் இரண்டு தற்போது மீள பயன்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில அரச வைத்தியசாலைகளிலும் சிறுநீரக விற்பனை மோசடி வைத்திய நிபுணர் அதிர்ச்சித் தகவல் சில அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் சிறுநீரக விற்பனை மோசடி இடம்பெறுவதாகச் சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி சில விசேட வைத்தியர்களின் உதவியுடன் பெறப்பட்ட சிறுநீரகம் 4 மில்லியன் ரூஉபா வரை விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் பழுதடைந்த கதிரியக்க இயந்திரங்கள் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்று அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.வைத்தியசாலையிலுள்ள 5 கதிரியக்க இயந்திரங்களில் 3 பழுதடைந்துள்ளன, அவற்றில் இரண்டு தற்போது மீள பயன்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.