கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் முத்திரைப் பணியகமும் ஒருங்கிணைந்து நடாத்தும் நாடளாவிய நத்தார் தபால் முத்திரை சித்திரப் போட்டி - 2024 கடந்த 03ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து மறைப்பாடசாலைகளிலும் நடைபெற்றது.
குறித்த போட்டியில் 10 வயதிற்கு உட்பட்டவர்கள், 10 - 15 வயதிற்கு இடைப்பட்டவர்கள், 15 - 21 வயதிற்கு இடைப்பட்டவர்கள், 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனும் நான்கு நிலைகளில் மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
10 வயதிற்குட்பட்ட பிரிவில் 78 சித்திரங்களும், 10 - 15 வயதுப் பிரிவில் 89 சித்திரங்களும், 15 - 21 வயதுப்பிரிவில் 17 சித்திரங்களும், 21 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் 02 சித்திரங்களுமாக மொத்தம் 186 ஆக்கங்கள் கிடைக்கப்பெற்றன.
குறித்த போட்டியில் பங்குபற்றி, மாணவர்கள் சமர்ப்பித்த ஆக்கங்களில் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை தரப்படுத்தும் நிகழ்வு மாவட்ட கிறிஸ்தவ கலாசாரப் பிரிவின் ஒழுங்கமைப்பில் நேற்றையதினம்(07) நடைபெற்றது.
இதன்போது குறித்த ஆக்கங்களை கிளிநொச்சி மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளிதரன் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் வெற்றிபெற தகுதியான ஆக்கங்களை கிளி.திருவையாறு மகாவித்தியாலய சித்திர பாட ஆசிரியர் நாகராஜா ஜெகதீஸ்வரன், கிளி.முருகானந்தா கல்லூரியின் சித்திர பாட ஆசிரியை உமா மகேஸ்வரி விசயகுமார், மாவட்ட கலாசார பிரிவின் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
இவர்களின் தெரிவின்படி10 வயதிற்குட்பட்ட பிரிவில் மாவட்ட மட்டத்தில் முறுகண்டி குழந்தை இயேசு ஆலய மறைப்பாடசாலை மாணவன் க.ஜோரெக்ஸ் முதலாமிடத்தினையும், பாரதிபுரம் புனித செபஸ்தியார் ஆலய மறைப் பாடசாலையைச் சேர்ந்த ம.ஜெர்சன் இரண்டாமிடத்தினையும், வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலய மறைப்பாடசாலை மாணவன் அ. திவாகர் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
10 - 15 வயதுப்பிரிவில் கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய மறைப்பாடசாலை மாணவி ஜெ.கரிஷ்மா முதலாமிடத்தினையும், வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலய மறைப்பாடசாலை மாணவி றொ.டொசினா இரண்டாமிடத்தினையும், தொண்டமான் நகர் புனித அந்தோனியார் ஆலய மறைப்பாடசாலை மாணவன் தி.கிர்த்திக் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
15 - 21 வயதுப்பிரிவில் உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை மறைப்பாடசாலை மாணவி தி.வேணுஷா முதலாமிடத்தினையும், கோணாவில் புனித செபஸ்தியார் ஆலய மறைப்பாடசாலை மாணவி ஞா.சன்சிகா இரண்டாமிடத்தினையும், உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை மறைப்பாடசாலை மாணவன் ம.மலரவன் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.
21 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை மறைப்பாடசாலை மறையாசிரியை திருமதி மேரி ஸ்ரெல்லா சிம்சன் போல் முதலாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்ட நத்தார் தபால் முத்திரை சித்திரப் போட்டி முடிவுகள். கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் முத்திரைப் பணியகமும் ஒருங்கிணைந்து நடாத்தும் நாடளாவிய நத்தார் தபால் முத்திரை சித்திரப் போட்டி - 2024 கடந்த 03ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து மறைப்பாடசாலைகளிலும் நடைபெற்றது. குறித்த போட்டியில் 10 வயதிற்கு உட்பட்டவர்கள், 10 - 15 வயதிற்கு இடைப்பட்டவர்கள், 15 - 21 வயதிற்கு இடைப்பட்டவர்கள், 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனும் நான்கு நிலைகளில் மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். 10 வயதிற்குட்பட்ட பிரிவில் 78 சித்திரங்களும், 10 - 15 வயதுப் பிரிவில் 89 சித்திரங்களும், 15 - 21 வயதுப்பிரிவில் 17 சித்திரங்களும், 21 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் 02 சித்திரங்களுமாக மொத்தம் 186 ஆக்கங்கள் கிடைக்கப்பெற்றன.குறித்த போட்டியில் பங்குபற்றி, மாணவர்கள் சமர்ப்பித்த ஆக்கங்களில் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை தரப்படுத்தும் நிகழ்வு மாவட்ட கிறிஸ்தவ கலாசாரப் பிரிவின் ஒழுங்கமைப்பில் நேற்றையதினம்(07) நடைபெற்றது.இதன்போது குறித்த ஆக்கங்களை கிளிநொச்சி மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளிதரன் பார்வையிட்டார். இந்நிகழ்வில் வெற்றிபெற தகுதியான ஆக்கங்களை கிளி.திருவையாறு மகாவித்தியாலய சித்திர பாட ஆசிரியர் நாகராஜா ஜெகதீஸ்வரன், கிளி.முருகானந்தா கல்லூரியின் சித்திர பாட ஆசிரியை உமா மகேஸ்வரி விசயகுமார், மாவட்ட கலாசார பிரிவின் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய குழுவினர் நியமிக்கப்பட்டனர். இவர்களின் தெரிவின்படி10 வயதிற்குட்பட்ட பிரிவில் மாவட்ட மட்டத்தில் முறுகண்டி குழந்தை இயேசு ஆலய மறைப்பாடசாலை மாணவன் க.ஜோரெக்ஸ் முதலாமிடத்தினையும், பாரதிபுரம் புனித செபஸ்தியார் ஆலய மறைப் பாடசாலையைச் சேர்ந்த ம.ஜெர்சன் இரண்டாமிடத்தினையும், வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலய மறைப்பாடசாலை மாணவன் அ. திவாகர் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.10 - 15 வயதுப்பிரிவில் கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய மறைப்பாடசாலை மாணவி ஜெ.கரிஷ்மா முதலாமிடத்தினையும், வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலய மறைப்பாடசாலை மாணவி றொ.டொசினா இரண்டாமிடத்தினையும், தொண்டமான் நகர் புனித அந்தோனியார் ஆலய மறைப்பாடசாலை மாணவன் தி.கிர்த்திக் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.15 - 21 வயதுப்பிரிவில் உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை மறைப்பாடசாலை மாணவி தி.வேணுஷா முதலாமிடத்தினையும், கோணாவில் புனித செபஸ்தியார் ஆலய மறைப்பாடசாலை மாணவி ஞா.சன்சிகா இரண்டாமிடத்தினையும், உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை மறைப்பாடசாலை மாணவன் ம.மலரவன் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.21 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை மறைப்பாடசாலை மறையாசிரியை திருமதி மேரி ஸ்ரெல்லா சிம்சன் போல் முதலாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.