• Feb 11 2026

யாழில் “கிட்டு – ஒரு தனி மனித வரலாறு” ஆவணக் காட்சியகம் ஆரம்பம்

Aathira / Jan 17th 2026, 8:58 am
image

யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டு பூங்காவில் “கிட்டு – ஒரு தனி மனித வரலாறு” எனப் பெயரிடப்பட்ட ஆவணக் காட்சியகம் நேற்று ஆரம்பமானது.

வரலாற்றுச் சம்பவங்களையும், அவற்றின் பின்னணியையும் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன், நினைவேந்தல் குழுவினரால் இந்த ஆவணக் காட்சியகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஆரம்பமான இந்த ஆவணக் காட்சியகத்தை, பொதுமக்கள் இன்றும் பார்வையிடலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, காட்சியகத்தை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


யாழில் “கிட்டு – ஒரு தனி மனித வரலாறு” ஆவணக் காட்சியகம் ஆரம்பம் யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டு பூங்காவில் “கிட்டு – ஒரு தனி மனித வரலாறு” எனப் பெயரிடப்பட்ட ஆவணக் காட்சியகம் நேற்று ஆரம்பமானது.வரலாற்றுச் சம்பவங்களையும், அவற்றின் பின்னணியையும் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன், நினைவேந்தல் குழுவினரால் இந்த ஆவணக் காட்சியகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று ஆரம்பமான இந்த ஆவணக் காட்சியகத்தை, பொதுமக்கள் இன்றும் பார்வையிடலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, காட்சியகத்தை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement