• Feb 11 2026

முதல்வர் மதிவதனி தலைமையில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் தைப்பொங்கல் நிகழ்வு

Aathira / Jan 17th 2026, 8:45 am
image

யாழ்ப்பாணம் மாநகரசபையின் தைப்பொங்கல் நிகழ்வு மாநகரசபையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாநகர முதல்வர் கௌரவ வி.மதிவதனி தலைமையில் நேற்று (16) மாநகரசபையில் நடைபெற்றது.

பொங்கல் நிகழ்வை மத வழிபாடுகளுடன் அரிசியிட்டு முதல்வர் மதிவதனி அவர்கள் ஆரம்பித்து வைத்ததுடன், உரிய முறைப்படியான சமய நிகழ்வுகள் இடம்பெற்று அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட்டது.

இந் நிகழ்வில் மாநகரசபையின் கௌரவ உறுப்பினர்கள், ஆணையாளர், செயலாளர், பிரதம பொறியியலாளர், கணக்காளர், உதவி ஆணையாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிளைகளின் பொறுப்பதிகாரிகள், மாநகர உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


முதல்வர் மதிவதனி தலைமையில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் தைப்பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் மாநகரசபையின் தைப்பொங்கல் நிகழ்வு மாநகரசபையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாநகர முதல்வர் கௌரவ வி.மதிவதனி தலைமையில் நேற்று (16) மாநகரசபையில் நடைபெற்றது.பொங்கல் நிகழ்வை மத வழிபாடுகளுடன் அரிசியிட்டு முதல்வர் மதிவதனி அவர்கள் ஆரம்பித்து வைத்ததுடன், உரிய முறைப்படியான சமய நிகழ்வுகள் இடம்பெற்று அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட்டது.இந் நிகழ்வில் மாநகரசபையின் கௌரவ உறுப்பினர்கள், ஆணையாளர், செயலாளர், பிரதம பொறியியலாளர், கணக்காளர், உதவி ஆணையாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிளைகளின் பொறுப்பதிகாரிகள், மாநகர உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement