• Feb 12 2025

மீண்டும் ஆரம்பமாகும் கே.கே.எஸ்- நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை;வெளியான அறிவிப்பு..!

Sharmi / Feb 10th 2025, 12:19 pm
image

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும்(12) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் 12ஆம் திகதியன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் சிவகங்கை கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.

இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்தில் 6 நாட்கள் சேவையில் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மீண்டும் ஆரம்பமாகும் கே.கே.எஸ்- நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை;வெளியான அறிவிப்பு. காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும்(12) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் எதிர்வரும் 12ஆம் திகதியன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் சிவகங்கை கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்தில் 6 நாட்கள் சேவையில் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement