• Sep 10 2024

கொல்கத்தா மருத்துவர் கொலை: சிசிடிவி காட்சியில் அதிர்ச்சி தகவல்..!

Tamil nila / Aug 25th 2024, 10:39 pm
image

Advertisement

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கில் சிசிடிவி காட்சி கிடைத்துள்ளதாகவும் அதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனையின் சிசிடிவி காட்சி, ப்ளூடூத் கருவி ஆகியவற்றின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் இது குறித்து தற்போது சிபிஐ விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் நள்ளிரவு ஒரு மணி அளவில் சஞ்சய ராய் மருத்துவமனைக்கு நுழைவது, கழுத்தில் ப்ளூடூத் கருவி மாட்டிக் கொண்டு, பெண் மருத்துவர் இருக்கும் இடத்தில் நோட்டமிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

ஏற்கனவே முந்தைய நாள் கொல்கத்தாவில் உள்ள சிவப்பு விளக்கு ஏரியாவுக்கு சென்று பாலியல் தொழில் செய்கின்ற பெண்களுடன் சஞ்சய் ராய் இருந்த தகவலும் வெளியான நிலையில் அதற்கு மறுநாள் தான் அவர் மருத்துவமனைக்கு சென்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தற்போது கூடுதலாக சஞ்சய் ராய் இடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


கொல்கத்தா மருத்துவர் கொலை: சிசிடிவி காட்சியில் அதிர்ச்சி தகவல். கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கில் சிசிடிவி காட்சி கிடைத்துள்ளதாகவும் அதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் மருத்துவமனையின் சிசிடிவி காட்சி, ப்ளூடூத் கருவி ஆகியவற்றின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் இது குறித்து தற்போது சிபிஐ விசாரணை செய்து வருகிறது.இந்நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் நள்ளிரவு ஒரு மணி அளவில் சஞ்சய ராய் மருத்துவமனைக்கு நுழைவது, கழுத்தில் ப்ளூடூத் கருவி மாட்டிக் கொண்டு, பெண் மருத்துவர் இருக்கும் இடத்தில் நோட்டமிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.ஏற்கனவே முந்தைய நாள் கொல்கத்தாவில் உள்ள சிவப்பு விளக்கு ஏரியாவுக்கு சென்று பாலியல் தொழில் செய்கின்ற பெண்களுடன் சஞ்சய் ராய் இருந்த தகவலும் வெளியான நிலையில் அதற்கு மறுநாள் தான் அவர் மருத்துவமனைக்கு சென்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தற்போது கூடுதலாக சஞ்சய் ராய் இடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement