• Nov 26 2024

கொரியா விசா ஒப்பந்தங்கள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு!

Tharmini / Nov 25th 2024, 1:46 pm
image

பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட E8 விசா ஒப்பந்தங்கள் இன்று (25) சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அந்தந்த ஒப்பந்தங்களின் செல்லுபடியை சரிபார்க்க வேண்டும்.

E8 விசா என்பது விவசாயம் மற்றும் மீன்பிடித் துறையில் வேலைகளுக்காக தென்கொரியாவிற்கு 8 மாதங்கள் வரை குறுகிய காலத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கும் முறையாகும் என அதன் மேலதிக பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

இதேவேளை, கொரியாவில் குறுகிய கால வேலை வாய்ப்பு கிடைத்தும் கொரியா செல்லும் வாய்ப்பு கிடைக்காத மக்களின் போராட்டம் இன்றும் இடம்பெற்று வருகின்றது.

E 8 Visa Unity என்ற சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (25) மூன்றாவது நாளாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முன்பாக தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

கொரியா விசா ஒப்பந்தங்கள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட E8 விசா ஒப்பந்தங்கள் இன்று (25) சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.அந்தந்த ஒப்பந்தங்களின் செல்லுபடியை சரிபார்க்க வேண்டும்.E8 விசா என்பது விவசாயம் மற்றும் மீன்பிடித் துறையில் வேலைகளுக்காக தென்கொரியாவிற்கு 8 மாதங்கள் வரை குறுகிய காலத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கும் முறையாகும் என அதன் மேலதிக பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.இதேவேளை, கொரியாவில் குறுகிய கால வேலை வாய்ப்பு கிடைத்தும் கொரியா செல்லும் வாய்ப்பு கிடைக்காத மக்களின் போராட்டம் இன்றும் இடம்பெற்று வருகின்றது. E 8 Visa Unity என்ற சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (25) மூன்றாவது நாளாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முன்பாக தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement