• Jun 07 2026

புனரமைப்பு பணிகளால் கொட்டா வீதி ரயில் கடவை தற்காலிகமாக மூடல்

Aathira / Jun 6th 2026, 10:09 am
image

களனிவெலி மார்க்கத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக, கொட்டா வீதி ரயில் கடவை மற்றும் சில ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, பேஸ்லைன் மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள கொட்டா வீதி ரயில் கடவை இன்று காலை 9.30 மணி முதல் நாளை காலை 7.30 மணி வரை வாகன போக்குவரத்திற்காக முழுமையாக மூடப்படவுள்ளது.

மேலும், இந்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டை மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்படவுள்ளன. 

எனினும், பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் இன்று பிற்பகல் மூன்று சாதாரண ரயில்கள் நாரஹேன்பிட்ட நிலையத்திலிருந்து அவிசாவளை வரை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, பிரதான மார்க்கத்தின் ஹொரப்பே ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையிலும் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதால், அந்த ரயில் கடவையும் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

எனவே, இந்த பாதைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளும் ரயில் பயணிகளும் மாற்று வழித்தடங்கள் மற்றும் பயணத் திட்டங்களை முன்கூட்டியே தயாரித்துக் கொள்ளுமாறு ரயில்வே திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

புனரமைப்பு பணிகளால் கொட்டா வீதி ரயில் கடவை தற்காலிகமாக மூடல் களனிவெலி மார்க்கத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக, கொட்டா வீதி ரயில் கடவை மற்றும் சில ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, பேஸ்லைன் மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள கொட்டா வீதி ரயில் கடவை இன்று காலை 9.30 மணி முதல் நாளை காலை 7.30 மணி வரை வாகன போக்குவரத்திற்காக முழுமையாக மூடப்படவுள்ளது.மேலும், இந்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டை மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்படவுள்ளன. எனினும், பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் இன்று பிற்பகல் மூன்று சாதாரண ரயில்கள் நாரஹேன்பிட்ட நிலையத்திலிருந்து அவிசாவளை வரை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதேவேளை, பிரதான மார்க்கத்தின் ஹொரப்பே ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையிலும் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதால், அந்த ரயில் கடவையும் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.எனவே, இந்த பாதைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளும் ரயில் பயணிகளும் மாற்று வழித்தடங்கள் மற்றும் பயணத் திட்டங்களை முன்கூட்டியே தயாரித்துக் கொள்ளுமாறு ரயில்வே திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement