இந்திய 'கிரிஷ்' நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை சட்டத்தரணிகள் நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகி இருக்கத் தீர்மானித்துள்ளமையால், குறித்த வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாகக் கூறி, இந்திய கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவைப் பெற்று, அதனைத் தனிப்பட்ட தேவைக்காக முறைகேடாகப் பயன்படுத்தினார் எனக் குற்றம் சுமத்தி நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாமலுக்கு எதிரான 'கிரிஷ்' வழக்கு பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு இந்திய 'கிரிஷ்' நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.இன்று திங்கட்கிழமை சட்டத்தரணிகள் நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகி இருக்கத் தீர்மானித்துள்ளமையால், குறித்த வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையில் ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாகக் கூறி, இந்திய கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவைப் பெற்று, அதனைத் தனிப்பட்ட தேவைக்காக முறைகேடாகப் பயன்படுத்தினார் எனக் குற்றம் சுமத்தி நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.