• Apr 23 2026

குறிகட்டுவான் இறங்குதுறை இரண்டாம் கட்ட அபிவிருத்திப்பணிகள் இன்று ஆரம்பம்!

shanu / Apr 22nd 2026, 4:04 pm
image

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் குறிகாட்டுவான் இறங்குதுறையினை புனரமைப்பு செய்வதற்கான இரண்டாம் கட்ட வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.


போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்தாயக்கவினால் குறித்த திட்டத்திற்கான பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது.


குறித்த திட்டமானது 984.03 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் நிலையில் எதிர்வரும் ஒக்ரோபர் 27 ஆம் திகதி இதன் வங்கிகள் யாவும் நிறைவடையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர்  வேதநாயகன் , 


குறிகாட்டுவான் அபிவிருத்தி தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இது முக்கியமான திட்டம் வெளிநாட்டு பணமல்ல இது அரசாங்கத்தின் பணமாகும் தீவகத்தின் அபிவிருத்தியில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது.


இந்த அரசாங்கத்தின் காலத்திலே அனைத்து அபிவுருத்திகளையும் மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.


நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்கா, 


தீவுப்பகுதியில் பெற்றோல் செற் ஒன்றினை அமைப்பதற்காக முயற்சி ஒன்றினை மேற்கொண்டு வருகிறோம்.


இறங்குதுறையின் பணிகள் நிறைவடைந்ததும் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு வேறு அரசு யாழ்ப்பாணம் வேறு அரசாங்கம் அல்ல அதே அரசாங்கம் தான் இங்கும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். 


அரச உத்தியோகத்தர்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பணியாற்ற வேண்டும். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வடக்கு மாகாணம் முழுவதும் வீதிகளைப்புனரமைப்புக்கு 2000 கோடி வரையில் ஒதுக்கப்பட்டுள்ளது.


வடக்கு மாகாண அபிவிருத்திகள் அனைத்தும் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் காணப்படும் நிலையில் அதனை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.


வடக்கு, கிழக்கு என்ற பாகுபாடின்றி அனைதது இனத்தவரும் வருகைதரும் இவ்விடத்தினை புனரமைப்பு செய்தல் அவசியமாகிறது. கடந்த அரசாங்கம் சிங்கள மக்களுக்கு மாத்திரம் சேவை செய்வதாக காணப்பட்டது. அத்துடன் சிங்கள மக்களுக்கு மாத்திரம் சேவை செய்வதாக காணப்பட்டது. ஆனால் தேசிய மக்கள் சக்தியானது பின்தங்கிய அனைத்து பிரதேச மக்களுக்கும் ஒரு மாதிரியாக வேலை செய்யும் அரசாங்கமாக காணப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து அபிவிருத்தப் பணிகள் தொடர்பிலும் பார்வையிட்டனர்.


நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கா, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன் மற்றும் வட பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி, நெடுந்தீவு, வேலனை பிரதேச செயலர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறிகட்டுவான் இறங்குதுறை இரண்டாம் கட்ட அபிவிருத்திப்பணிகள் இன்று ஆரம்பம் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் குறிகாட்டுவான் இறங்குதுறையினை புனரமைப்பு செய்வதற்கான இரண்டாம் கட்ட வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்தாயக்கவினால் குறித்த திட்டத்திற்கான பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது.குறித்த திட்டமானது 984.03 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் நிலையில் எதிர்வரும் ஒக்ரோபர் 27 ஆம் திகதி இதன் வங்கிகள் யாவும் நிறைவடையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர்  வேதநாயகன் , குறிகாட்டுவான் அபிவிருத்தி தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இது முக்கியமான திட்டம் வெளிநாட்டு பணமல்ல இது அரசாங்கத்தின் பணமாகும் தீவகத்தின் அபிவிருத்தியில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது.இந்த அரசாங்கத்தின் காலத்திலே அனைத்து அபிவுருத்திகளையும் மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்கா, தீவுப்பகுதியில் பெற்றோல் செற் ஒன்றினை அமைப்பதற்காக முயற்சி ஒன்றினை மேற்கொண்டு வருகிறோம்.இறங்குதுறையின் பணிகள் நிறைவடைந்ததும் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு வேறு அரசு யாழ்ப்பாணம் வேறு அரசாங்கம் அல்ல அதே அரசாங்கம் தான் இங்கும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். அரச உத்தியோகத்தர்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பணியாற்ற வேண்டும். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வடக்கு மாகாணம் முழுவதும் வீதிகளைப்புனரமைப்புக்கு 2000 கோடி வரையில் ஒதுக்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாண அபிவிருத்திகள் அனைத்தும் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் காணப்படும் நிலையில் அதனை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.வடக்கு, கிழக்கு என்ற பாகுபாடின்றி அனைதது இனத்தவரும் வருகைதரும் இவ்விடத்தினை புனரமைப்பு செய்தல் அவசியமாகிறது. கடந்த அரசாங்கம் சிங்கள மக்களுக்கு மாத்திரம் சேவை செய்வதாக காணப்பட்டது. அத்துடன் சிங்கள மக்களுக்கு மாத்திரம் சேவை செய்வதாக காணப்பட்டது. ஆனால் தேசிய மக்கள் சக்தியானது பின்தங்கிய அனைத்து பிரதேச மக்களுக்கும் ஒரு மாதிரியாக வேலை செய்யும் அரசாங்கமாக காணப்படுகிறது.இதனைத் தொடர்ந்து அபிவிருத்தப் பணிகள் தொடர்பிலும் பார்வையிட்டனர்.நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கா, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன் மற்றும் வட பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி, நெடுந்தீவு, வேலனை பிரதேச செயலர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement