• Nov 23 2024

சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை கிடப்பில் போடப்பட்ட குருந்தூர்மலை வழக்கு....!samugammedia

Sharmi / Jan 11th 2024, 1:57 pm
image

சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் தெரிவித்தார்.

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கானது முல்லைத்தீவு நீதிமன்றத்திலே இன்றையதினம் எடுத்து கொள்ளப்பட்டது. 

வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை பிரதேசத்திலே நீதிமன்ற கட்டளையை நிறைவேற்றப்பட வேண்டும் என அமைதி வழியிலே போராட்டத்தை நடாத்திய அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய நபர்களுக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றையதினம் B688/2002 நீதிமன்றத்திலே எடுத்து கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கின் போது முல்லைத்தீவு பொலிஸார் தாங்கள் இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் மேலதிக ஆலோசனை பெற வேண்டும் என விண்ணப்பம் செய்திருந்தனர். 

இன்றையதினம் சந்தேகநபர்கள், இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் உட்பட ஐந்து நபர்களாக இணைக்கப்பட்டிருந்தார்கள்.

இவர்கள் சார்பிலே முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சார்ந்த அனைத்து சட்டத்தரணிகளும் ஆஜராகி நாங்கள் விண்ணப்பம் செய்திருந்தோம். 

குறித்த வழக்கானது பிழையாக தாக்கல் செய்யப்பட்ட அமைதி வழியிலே போராடிய அரசியல்வாதிகள் மற்றும் சமூக அக்கறையுள்ளவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கென மன்றிற்கு தெரிவித்திருந்தோம்.

மேலும், சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரையில் இவ்வழக்கினை கிடப்பில் போடவேண்டும் எனவும் மேலதிகமாக இந்த வழக்கினை தொடர வேண்டும் என சந்தர்ப்பம் ஏற்பட்டால் மாத்திரம் குறித்த சந்தேக நபர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு மீண்டும் இந்த வழக்கானது நீதிமன்றிலே கொண்ட செல்லப்பட முடியும் எனவும் விண்ணப்பம் செய்திருந்தோம்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதவான், குறித்த வழக்கினை இன்றையதினத்திலிருந்து கிடப்பில் போட்டுள்ளார்.

மீளவும் அறிவித்தல் கிடைத்தால் மாத்திரம் குறித்த சந்தேக நபர்கள் வழக்கிற்கு வருகை தர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

குறித்த வழக்கிற்கு பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீட்சன் ஆகியோர் தோன்றியிருந்தனர்.



சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை கிடப்பில் போடப்பட்ட குருந்தூர்மலை வழக்கு.samugammedia சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் தெரிவித்தார்.குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கானது முல்லைத்தீவு நீதிமன்றத்திலே இன்றையதினம் எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,குருந்தூர்மலை பிரதேசத்திலே நீதிமன்ற கட்டளையை நிறைவேற்றப்பட வேண்டும் என அமைதி வழியிலே போராட்டத்தை நடாத்திய அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய நபர்களுக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றையதினம் B688/2002 நீதிமன்றத்திலே எடுத்து கொள்ளப்பட்டது.குறித்த வழக்கின் போது முல்லைத்தீவு பொலிஸார் தாங்கள் இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் மேலதிக ஆலோசனை பெற வேண்டும் என விண்ணப்பம் செய்திருந்தனர். இன்றையதினம் சந்தேகநபர்கள், இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் உட்பட ஐந்து நபர்களாக இணைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் சார்பிலே முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சார்ந்த அனைத்து சட்டத்தரணிகளும் ஆஜராகி நாங்கள் விண்ணப்பம் செய்திருந்தோம். குறித்த வழக்கானது பிழையாக தாக்கல் செய்யப்பட்ட அமைதி வழியிலே போராடிய அரசியல்வாதிகள் மற்றும் சமூக அக்கறையுள்ளவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கென மன்றிற்கு தெரிவித்திருந்தோம்.மேலும், சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரையில் இவ்வழக்கினை கிடப்பில் போடவேண்டும் எனவும் மேலதிகமாக இந்த வழக்கினை தொடர வேண்டும் என சந்தர்ப்பம் ஏற்பட்டால் மாத்திரம் குறித்த சந்தேக நபர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு மீண்டும் இந்த வழக்கானது நீதிமன்றிலே கொண்ட செல்லப்பட முடியும் எனவும் விண்ணப்பம் செய்திருந்தோம். அதனை ஏற்றுக்கொண்ட நீதவான், குறித்த வழக்கினை இன்றையதினத்திலிருந்து கிடப்பில் போட்டுள்ளார். மீளவும் அறிவித்தல் கிடைத்தால் மாத்திரம் குறித்த சந்தேக நபர்கள் வழக்கிற்கு வருகை தர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.குறித்த வழக்கிற்கு பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீட்சன் ஆகியோர் தோன்றியிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement