2011ஆம் ஆண்டில் மனித உரிமை ஆர்வலர்கள் லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் போனது தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இணையவழியாகச் சாட்சியமளிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திலிருந்து யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு அடுத்த மாதம் 29ஆம் திகதி இவ்வாறு சாட்சியமளிக்க கோட்டாபயவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2011 டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவர்களது உறவினர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்சவிற்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் 2019ஆம் ஆண்டு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
லலித் - குகன் வழக்கு - கோட்டாவுக்கு நீதிமன்றம் விசேட உத்தரவு 2011ஆம் ஆண்டில் மனித உரிமை ஆர்வலர்கள் லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் போனது தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இணையவழியாகச் சாட்சியமளிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திலிருந்து யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு அடுத்த மாதம் 29ஆம் திகதி இவ்வாறு சாட்சியமளிக்க கோட்டாபயவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த 2011 டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவர்களது உறவினர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்சவிற்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் 2019ஆம் ஆண்டு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது