யாழ்ப்பாணம் – காரைநகரில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 12ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அறியப்படுகிறது.
பௌத்த – சிங்கள பேரினவாத நிகழ்சி நிரலை முன்னெடுக்கும் அரசாங்கத்தின் அனைத்து திணைக்களங்களும், தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்வதிலேயே குறியாக இருக்கின்றன.
அதன் ஓர் அங்கமாக காரைநகரில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 12ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதை முறியடிக்கும் வகையில் அனைவரும் அன்று காலை 8 மணிக்கு அணிதிரளவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
போரைக் காரணம் காட்டி தாயகத்தில் நிலைகொண்ட சிறிலங்காப் படைகள் தற்போது அந்தக் காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிக்க முயல்கின்றன.
காணிகளை விடுவிப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினாலும் அவரது கருத்து செயலுருப்பெறவில்லை. வெறுமனே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவே அவர் அப்படி கூறுகின்றார்.
சிறிலங்கா அரச இயந்திரந்தின் ஒவ்வொரு திணைக்களங்களும் தமிழர் தாயகத்தை எப்படி வல்வளைப்புச் செய்யலாம் என்பதிலேயே குறியாக இயங்குகின்றன. அ
ராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரத்தை வன உயிரிகள் திணைக்களம் சுவீகரிப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்திருக்கின்றது.
எமது அப்பு ஆச்சியர் ஆண்ட மண்ணை அந்நியரிடம் இழக்க முடியாது. நிலத்தை மீட்டுக்கும் இந்தப் போராட்டத்தில் அந்தக் காணி உரிமையாளர்கள் மாத்திரமல்ல பொதுமக்களும் பங்கேற்று ஆதரவு தரக்கோருகின்றேன், என தெரிவித்துள்ளார்..
யாழின் முக்கிய பகுதியில் காணி சுவீகரிப்பு -படைகளின் ஆக்கிரமிப்பை தடுக்க அணிதிரளுமாறு சரவணபவன் அறைகூவல் யாழ்ப்பாணம் – காரைநகரில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 12ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அறியப்படுகிறது.பௌத்த – சிங்கள பேரினவாத நிகழ்சி நிரலை முன்னெடுக்கும் அரசாங்கத்தின் அனைத்து திணைக்களங்களும், தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்வதிலேயே குறியாக இருக்கின்றன. அதன் ஓர் அங்கமாக காரைநகரில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 12ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதை முறியடிக்கும் வகையில் அனைவரும் அன்று காலை 8 மணிக்கு அணிதிரளவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,போரைக் காரணம் காட்டி தாயகத்தில் நிலைகொண்ட சிறிலங்காப் படைகள் தற்போது அந்தக் காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிக்க முயல்கின்றன. காணிகளை விடுவிப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினாலும் அவரது கருத்து செயலுருப்பெறவில்லை. வெறுமனே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவே அவர் அப்படி கூறுகின்றார்.சிறிலங்கா அரச இயந்திரந்தின் ஒவ்வொரு திணைக்களங்களும் தமிழர் தாயகத்தை எப்படி வல்வளைப்புச் செய்யலாம் என்பதிலேயே குறியாக இயங்குகின்றன. அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரத்தை வன உயிரிகள் திணைக்களம் சுவீகரிப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்திருக்கின்றது.எமது அப்பு ஆச்சியர் ஆண்ட மண்ணை அந்நியரிடம் இழக்க முடியாது. நிலத்தை மீட்டுக்கும் இந்தப் போராட்டத்தில் அந்தக் காணி உரிமையாளர்கள் மாத்திரமல்ல பொதுமக்களும் பங்கேற்று ஆதரவு தரக்கோருகின்றேன், என தெரிவித்துள்ளார்.