பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பத்து குடும்பங்கள் பாதுகாப்பு முறையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை ஹலிஎல ஸ்பிரின்வெளிவத்த 5 பிரிவில் இன்று (20) பிற்பகல் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த பகுதியில் வசிக்கும் பத்து குடும்பங்கள் பாதுகாப்பு முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு அடியிலிருக்கும் ஓரங்கள் மண்சரிவினால் இடிந்து காணப்படுவதால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அந்த இடத்தை ஆய்வு செய்ய உள்ளதாகவும்,
அந்த நிறுவனம் வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது
பதுளையின் முக்கிய பகுதியில் மண்சரிவு. வெளியேற்றப்பட்ட பத்து குடும்பங்கள் பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பத்து குடும்பங்கள் பாதுகாப்பு முறையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.பதுளை ஹலிஎல ஸ்பிரின்வெளிவத்த 5 பிரிவில் இன்று (20) பிற்பகல் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த பகுதியில் வசிக்கும் பத்து குடும்பங்கள் பாதுகாப்பு முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.குறித்த பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு அடியிலிருக்கும் ஓரங்கள் மண்சரிவினால் இடிந்து காணப்படுவதால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அந்த இடத்தை ஆய்வு செய்ய உள்ளதாகவும், அந்த நிறுவனம் வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது