• Mar 06 2026

சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் தெமோதரையில் மண்சரிவு அபாயம்!

Chithra / Dec 10th 2025, 11:30 am
image


பதுளை மாவட்டத்தின் எல்ல - தெமோதரை பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று  தெரிவித்துள்ளது.

தெமோதரை பகுதியில் உள்ள மண்மேடுகள் 250 மீற்றர் அடி சற்று முன்னோக்கி சரிந்து காணப்படுவதாக  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதில் பணிப்பாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.

இதனால், அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

எல்ல - தெமோதரை பகுதி சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் பகுதி என்பதால் அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் உடனடியாக இடம்பெயர வேண்டும் எனவும்  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, பதுளை மாவட்டம் முழுவதும் சேதமடைந்த 1,020 நீர்ப்பாசன முறைமைகளைப் மறு சீரமைக்கும், பாரிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் தெமோதரையில் மண்சரிவு அபாயம் பதுளை மாவட்டத்தின் எல்ல - தெமோதரை பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று  தெரிவித்துள்ளது.தெமோதரை பகுதியில் உள்ள மண்மேடுகள் 250 மீற்றர் அடி சற்று முன்னோக்கி சரிந்து காணப்படுவதாக  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதில் பணிப்பாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.இதனால், அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.எல்ல - தெமோதரை பகுதி சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் பகுதி என்பதால் அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் உடனடியாக இடம்பெயர வேண்டும் எனவும்  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பதுளை மாவட்டம் முழுவதும் சேதமடைந்த 1,020 நீர்ப்பாசன முறைமைகளைப் மறு சீரமைக்கும், பாரிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement