• Feb 07 2026

மண்சரிவில் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செல்ல நாய் சூட்டி.!

Chithra / Dec 10th 2025, 10:41 am
image

 

பதுளை -   மாஸ்பன்ன நகரத்தில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் இருந்து 11 பேரை செல்ல பிராணியான நாய் காப்பாற்றிய தகவல் தற்போது பரவிவருகின்றது. 


வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஓய்வு நிலை உத்தியோகத்தர் ரி.வி.தென்னக்கோன் என்பவரின் செல்ல பிராணியான சூட்டியே இந்த உயிர்களை காப்பாற்றியுள்ளது. 


இதுதொடர்பில் அவரின் உயிமையாளர் தென்னக்கோன் தெரிவிக்கையில் 


கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மாலை கன மழை கொட்டி கொண்டிருந்தது. இது வழக்கத்துக்கு மாறான மழை. பாரிய வெள்ள பெருக்கு ஏற்பட்டது. பின்னேரம் அளவில் மின்சாரம் தடைப்பட்டது. வீதிகள் மூடப்பட்டன. கிராமமே தனிமைப்பட்டிருந்தது.


அப்போது நாங்கள் இரா போசணத்தை தயார் செய்து கொண்டிருந்தோம். சூட்டி வீட்டு கதவை விராண்டி கொண்டிருந்தது. பெரிதாக குரைத்து சத்தம் போட்டு கொண்டே இருந்தது.


இதையடுத்து வெளியேவந்து பார்த்தேன். அந்தநேரம் மலையில் இருந்து பாறைகள் உருண்டு விழுகின்ற சத்தங்கள் கேட்டன. உடனே பேராபத்தை உணர்ந்து கொண்டேன். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களையும் எச்சரித்தேன்.  இதன்பின் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றோம் என தெரிவித்துள்ளார். 


சூட்டியின் எச்சரிக்கையால் பல மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இல்லையேல் நாங்களும் மண் சரிவுக்குள் சிக்கி உயிர் விட நேர்ந்திருக்கும். சூட்டியை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்  என தெரிவித்தார். 


எனினும் மாஸ்பன்ன நகரில் மண்சரிவில் சிக்கி பல வீடுகள், தபால் நிலையம், பேருந்து நிலையம் என்பன முற்றிலும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மண்சரிவில் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செல்ல நாய் சூட்டி.  பதுளை -   மாஸ்பன்ன நகரத்தில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் இருந்து 11 பேரை செல்ல பிராணியான நாய் காப்பாற்றிய தகவல் தற்போது பரவிவருகின்றது. வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஓய்வு நிலை உத்தியோகத்தர் ரி.வி.தென்னக்கோன் என்பவரின் செல்ல பிராணியான சூட்டியே இந்த உயிர்களை காப்பாற்றியுள்ளது. இதுதொடர்பில் அவரின் உயிமையாளர் தென்னக்கோன் தெரிவிக்கையில் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மாலை கன மழை கொட்டி கொண்டிருந்தது. இது வழக்கத்துக்கு மாறான மழை. பாரிய வெள்ள பெருக்கு ஏற்பட்டது. பின்னேரம் அளவில் மின்சாரம் தடைப்பட்டது. வீதிகள் மூடப்பட்டன. கிராமமே தனிமைப்பட்டிருந்தது.அப்போது நாங்கள் இரா போசணத்தை தயார் செய்து கொண்டிருந்தோம். சூட்டி வீட்டு கதவை விராண்டி கொண்டிருந்தது. பெரிதாக குரைத்து சத்தம் போட்டு கொண்டே இருந்தது.இதையடுத்து வெளியேவந்து பார்த்தேன். அந்தநேரம் மலையில் இருந்து பாறைகள் உருண்டு விழுகின்ற சத்தங்கள் கேட்டன. உடனே பேராபத்தை உணர்ந்து கொண்டேன். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களையும் எச்சரித்தேன்.  இதன்பின் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றோம் என தெரிவித்துள்ளார். சூட்டியின் எச்சரிக்கையால் பல மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இல்லையேல் நாங்களும் மண் சரிவுக்குள் சிக்கி உயிர் விட நேர்ந்திருக்கும். சூட்டியை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்  என தெரிவித்தார். எனினும் மாஸ்பன்ன நகரில் மண்சரிவில் சிக்கி பல வீடுகள், தபால் நிலையம், பேருந்து நிலையம் என்பன முற்றிலும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement