• Feb 15 2026

கயிறு தடக்கி நெடுந்தீவு கடலில் வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

Chithra / Dec 10th 2025, 10:39 am
image


நெடுந்தீவு - நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இச் சம்பவம் இன்று காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 


உயிரிழந்தவர் நெடுந்தீவு கிழக்கு, 15 ஆம் வட்டாரம், தொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பரராசசிங்கம் பிறேமகுமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் தெரியவருகையில்,


குறித்த நபர் நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏறுவதற்கு முயற்சித்துள்ளார்.


இதன்போது அவர் படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்துள்ளார்.


அவரை மீட்க அருகில் நின்றவர்கள் முயற்சித்தபோதும் அவரை உயிருடன் மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 


இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கயிறு தடக்கி நெடுந்தீவு கடலில் வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு நெடுந்தீவு - நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் இன்று காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் நெடுந்தீவு கிழக்கு, 15 ஆம் வட்டாரம், தொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பரராசசிங்கம் பிறேமகுமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தெரியவருகையில்,குறித்த நபர் நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏறுவதற்கு முயற்சித்துள்ளார்.இதன்போது அவர் படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்துள்ளார்.அவரை மீட்க அருகில் நின்றவர்கள் முயற்சித்தபோதும் அவரை உயிருடன் மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement