நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (30) பிற்பகல் வரை செல்லுபடியாகும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக செல்ல கதிர்காமம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை. வெள்ளத்தில் மூழ்கிய செல்ல கதிர்காமம் கோவில் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (30) பிற்பகல் வரை செல்லுபடியாகும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இதேவேளை, நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக செல்ல கதிர்காமம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.