• Oct 06 2024

இந்தியாவில் இருந்து 6 மில்லியன் முட்டைகளுடன் இலங்கை வரும் கப்பல்..!

Chithra / Dec 30th 2023, 10:24 am
image

Advertisement

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேலும் 6 மில்லியன் முட்டைகள் அடங்கிய கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முட்டை தொகை எதிர்வரும் வியாழக்கிழமை முதல் நாடளாவிய ரீதியாக உள்ள சதொச வர்த்தக நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.

இதேவேளை, வரி அதிகரிப்பின் ஊடாக தங்களது உற்பத்தி செலவு அதிகரிக்காவிட்டால் எதிர்வரும் மாதங்களில் முட்டை ஒன்றை 30 முதல் 35 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து 6 மில்லியன் முட்டைகளுடன் இலங்கை வரும் கப்பல். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேலும் 6 மில்லியன் முட்டைகள் அடங்கிய கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.குறித்த முட்டை தொகை எதிர்வரும் வியாழக்கிழமை முதல் நாடளாவிய ரீதியாக உள்ள சதொச வர்த்தக நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.இதேவேளை, வரி அதிகரிப்பின் ஊடாக தங்களது உற்பத்தி செலவு அதிகரிக்காவிட்டால் எதிர்வரும் மாதங்களில் முட்டை ஒன்றை 30 முதல் 35 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement