• Nov 24 2024

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை

Chithra / Oct 10th 2024, 1:07 pm
image


நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்பு இன்று மாலை வரை அமுலில் இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தில் நாகொட மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, ஹொரண, மத்துகம, புலத்சிங்கல மற்றும் வல்லவிட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கும், மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் அதிக மழை பெய்தால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.இவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்பு இன்று மாலை வரை அமுலில் இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இதன்படி, காலி மாவட்டத்தில் நாகொட மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, ஹொரண, மத்துகம, புலத்சிங்கல மற்றும் வல்லவிட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கும், மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த பகுதிகளில் அதிக மழை பெய்தால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement