தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக தர்மபுர பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் இன்று சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதன்போதே வீட்டில் சூட்சுமமான முறையில் மலக்குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 240 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா தர்மபுர பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த தருமபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரம் பொலிஸ் பிரிவில் பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்பு தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக தர்மபுர பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் இன்று சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்போதே வீட்டில் சூட்சுமமான முறையில் மலக்குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 240 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா தர்மபுர பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தின் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த தருமபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.