• Sep 19 2025

கரைதுறைப்பற்று பிரதேச சபையால் கையளிக்கப்பட்ட கடைகள் சீரில்லை - வியாபாரிகள் பாதிப்பு!

shanuja / Sep 18th 2025, 9:23 pm
image

கரைதுறைப்பற்று பிரதேச சபையினரால் தபால் நிலைய வீதியில் புதிதாக கட்டி வாடகைக்கு விடப்பட்ட கடைத்தொகுதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி வழங்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் இன்று (18) குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.


26 லட்சத்து 40 ஆயிரம் ரூபா  முற்பணமாகவும் மாதம் 11,000 ரூபா வாடகைக்கு கடைகளை எடுத்து நடாத்தும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


குறித்த கடைத்தொகுதிகளில் சுவர்கள் வெடித்து காணப்படுதல், தண்ணீர் கடைகளுக்குள் புகுதல், இதனால் குளிர்சாதன பெட்டிகள் பழுதடைதல், குளிர்சாதன பெட்டிக்குள் வைக்கப்படும் பூ பழுதடைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. 


இது தொடர்பாக கடை உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கையில், 

 பூ மாலை கட்டி வியாபாரம் செய்வதே எமது பிரதான தொழிலாக காணப்படுவதனால் பூக்கள் பழுதடைந்தமையால் லட்சக்கணக்கான நட்டத்தை சந்தித்துள்ளேன். மூன்றாவது தடவையாக பூக்கள் அனைத்தும் அழுகி கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


பல தடவைகள் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு எழுத்து மூலம் அறிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அண்மையில் குறித்த கடைகளின் முன்பகுதியில் பிரதேச சபையினரால் வாய்க்கால் வெட்டியிருப்பதால் வாடிக்கையாளர்கள் கடைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


வியாபாரம் செய்ய முடியாத நிலையில் பலர் குறித்த கடைத்தொகுதியில் எடுத்து கொண்ட கடைகளை பூட்டி விட்டு சென்றுள்ளதாகவும், தற்போதும் கடைகளை எடுத்த ஏனையவர்களும் விட்டு செல்லும் நிலையிலும் இருக்கின்றது.


நேற்றையதினம் மழை பெய்ததனால் பூக்கள் அனைத்தும் அழுகி சேதமடைந்த நிலையில், கடை உரிமையாளர் நேரடியாக பிரதேச சபைக்கு சென்று தீர்வு கோர சென்ற போதும், கூட்டம் நடப்பதால் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை எனவும்  தெரிவித்தார். 


வியாபாரிகள், “பல லட்சம் ரூபாய் செலவழித்து எடுத்து கொண்ட கடைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான உடனடி தீர்வை பிரதேச சபை வழங்க வேண்டும்” என வலியுறுத்தி நிற்கின்றனர்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையால் கையளிக்கப்பட்ட கடைகள் சீரில்லை - வியாபாரிகள் பாதிப்பு கரைதுறைப்பற்று பிரதேச சபையினரால் தபால் நிலைய வீதியில் புதிதாக கட்டி வாடகைக்கு விடப்பட்ட கடைத்தொகுதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி வழங்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் இன்று (18) குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.26 லட்சத்து 40 ஆயிரம் ரூபா  முற்பணமாகவும் மாதம் 11,000 ரூபா வாடகைக்கு கடைகளை எடுத்து நடாத்தும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.குறித்த கடைத்தொகுதிகளில் சுவர்கள் வெடித்து காணப்படுதல், தண்ணீர் கடைகளுக்குள் புகுதல், இதனால் குளிர்சாதன பெட்டிகள் பழுதடைதல், குளிர்சாதன பெட்டிக்குள் வைக்கப்படும் பூ பழுதடைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இது தொடர்பாக கடை உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கையில்,  பூ மாலை கட்டி வியாபாரம் செய்வதே எமது பிரதான தொழிலாக காணப்படுவதனால் பூக்கள் பழுதடைந்தமையால் லட்சக்கணக்கான நட்டத்தை சந்தித்துள்ளேன். மூன்றாவது தடவையாக பூக்கள் அனைத்தும் அழுகி கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பல தடவைகள் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு எழுத்து மூலம் அறிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அண்மையில் குறித்த கடைகளின் முன்பகுதியில் பிரதேச சபையினரால் வாய்க்கால் வெட்டியிருப்பதால் வாடிக்கையாளர்கள் கடைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வியாபாரம் செய்ய முடியாத நிலையில் பலர் குறித்த கடைத்தொகுதியில் எடுத்து கொண்ட கடைகளை பூட்டி விட்டு சென்றுள்ளதாகவும், தற்போதும் கடைகளை எடுத்த ஏனையவர்களும் விட்டு செல்லும் நிலையிலும் இருக்கின்றது.நேற்றையதினம் மழை பெய்ததனால் பூக்கள் அனைத்தும் அழுகி சேதமடைந்த நிலையில், கடை உரிமையாளர் நேரடியாக பிரதேச சபைக்கு சென்று தீர்வு கோர சென்ற போதும், கூட்டம் நடப்பதால் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை எனவும்  தெரிவித்தார். வியாபாரிகள், “பல லட்சம் ரூபாய் செலவழித்து எடுத்து கொண்ட கடைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான உடனடி தீர்வை பிரதேச சபை வழங்க வேண்டும்” என வலியுறுத்தி நிற்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement