• Sep 19 2025

சிறுமியின் தொண்டையில் சிக்கிக் கொண்ட சுவிங்கம்; உயிரைக் காத்த இளைஞர்கள் குவியும் பாராட்டுக்கள்!

shanuja / Sep 18th 2025, 4:36 pm
image

சிறுமியின் தொண்டையில் சுவிங்கம் சிக்கியதையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் குழுவொன்று ஓடிச் சென்று காப்பாற்றிய நெகிழ்ச்சிக் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. 


இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் கண்ணூர் மாவட்டம் - பழையங்காடியில் பதிவாகியுள்ளது. 


குறித்த பகுதியில் இளைஞர்கள் குழுவினர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அதன்போது குறித்த பகுதி வீதியால் சைக்கிளில் சிறுமி ஒருவர் வந்து கொண்டிருந்தார்.  


சிறுமி சுவிங்கம் சாப்பிட்டுக்கொண்டு வந்திருந்தார். திடீரென அவரது தொண்டையில் அந்த சுவிங்கம் சிக்கிக் கொண்டது. 


அதன்பின்னர் சிறுமி சைக்கிளை நிறுத்தி விட்டு மூச்செடுக்க சிரமப்பட்டுள்ளார்.  பின்னர் அங்கு நின்ற இளைஞர்களிடம் சென்று தனது தொண்டையில் சுவிங்கம் சிக்கியதை தெரிவித்தார்.                                                                                            அதனையடுத்து  இளைஞர்கள், உடனே  சிறுமியை சைக்கிளில் இருந்து இறக்கினர். 


பின்னர் சிறுமியின் முதுகை தட்டித் தட்டி விட்டு தொண்டையில் சிக்கிய சுவிங்கத்தை வெளியில் கொண்டுவர முயற்சித்தனர். 


சிறிது நேரத்தின் பின்னர் சிறுமியின் தொணை்டையில் சிக்கிய சுவிங்கம் வெளியே வந்தது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறுமியின் தொண்டையில் சிக்கிய சுவிங்கத்தை வெளியே எடுக்க பதற்றமின்றி இளைஞர்கள் செயற்பட்டனர். 


இளைஞர்களின் இந்த துணிகர செயலின் காணொளியைப் பார்த்த பலரும் சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு எனக் கூறி இளைஞர்களைப் பாராட்டி வாழ்த்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

சிறுமியின் தொண்டையில் சிக்கிக் கொண்ட சுவிங்கம்; உயிரைக் காத்த இளைஞர்கள் குவியும் பாராட்டுக்கள் சிறுமியின் தொண்டையில் சுவிங்கம் சிக்கியதையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் குழுவொன்று ஓடிச் சென்று காப்பாற்றிய நெகிழ்ச்சிக் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் கண்ணூர் மாவட்டம் - பழையங்காடியில் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் இளைஞர்கள் குழுவினர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அதன்போது குறித்த பகுதி வீதியால் சைக்கிளில் சிறுமி ஒருவர் வந்து கொண்டிருந்தார்.  சிறுமி சுவிங்கம் சாப்பிட்டுக்கொண்டு வந்திருந்தார். திடீரென அவரது தொண்டையில் அந்த சுவிங்கம் சிக்கிக் கொண்டது. அதன்பின்னர் சிறுமி சைக்கிளை நிறுத்தி விட்டு மூச்செடுக்க சிரமப்பட்டுள்ளார்.  பின்னர் அங்கு நின்ற இளைஞர்களிடம் சென்று தனது தொண்டையில் சுவிங்கம் சிக்கியதை தெரிவித்தார்.                                                                                            அதனையடுத்து  இளைஞர்கள், உடனே  சிறுமியை சைக்கிளில் இருந்து இறக்கினர். பின்னர் சிறுமியின் முதுகை தட்டித் தட்டி விட்டு தொண்டையில் சிக்கிய சுவிங்கத்தை வெளியில் கொண்டுவர முயற்சித்தனர். சிறிது நேரத்தின் பின்னர் சிறுமியின் தொணை்டையில் சிக்கிய சுவிங்கம் வெளியே வந்தது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறுமியின் தொண்டையில் சிக்கிய சுவிங்கத்தை வெளியே எடுக்க பதற்றமின்றி இளைஞர்கள் செயற்பட்டனர். இளைஞர்களின் இந்த துணிகர செயலின் காணொளியைப் பார்த்த பலரும் சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு எனக் கூறி இளைஞர்களைப் பாராட்டி வாழ்த்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement