• Sep 19 2025

ட்ரோன் கமராவை பறக்க விட்ட மூவர் கைது!

shanuja / Sep 18th 2025, 4:34 pm
image

ருவன்வெலிசேயாவுக்கு மேலே ட்ரோன் கேமரா பறக்க விட்ட மூவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்​தேக நபர்கள் பலாங்கொடை, மாளிகாவத்தை மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த 23 - 32 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.


இந்த மூன்று நபர்களும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதுடன் புதன்கிழமை (17) அன்று வாகன விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடத்தி முடித்து விட்டு, ருவன்வெலிசேயாவுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வாகன நிறுத்துமிடத்தின் அருகில் இருந்து ட்ரோன் கேமராவை பறக்க விட்டுள்ளனர்.


அனுமதியின்றி ட்ரோன் கேமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ருவன்வெலிசேயா, உடமலுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக அனுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ட்ரோன் கமராவை பறக்க விட்ட மூவர் கைது ருவன்வெலிசேயாவுக்கு மேலே ட்ரோன் கேமரா பறக்க விட்ட மூவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்​தேக நபர்கள் பலாங்கொடை, மாளிகாவத்தை மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த 23 - 32 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.இந்த மூன்று நபர்களும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதுடன் புதன்கிழமை (17) அன்று வாகன விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடத்தி முடித்து விட்டு, ருவன்வெலிசேயாவுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வாகன நிறுத்துமிடத்தின் அருகில் இருந்து ட்ரோன் கேமராவை பறக்க விட்டுள்ளனர்.அனுமதியின்றி ட்ரோன் கேமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ருவன்வெலிசேயா, உடமலுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக அனுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement