• Sep 19 2025

சந்தேகநபர், பொலிஸார் இடையே துப்பாக்கிச்சூடு; பொலிஸார் மூவர் பலி - சந்தேகநபரும் சுட்டுக்கொலை!

shanuja / Sep 18th 2025, 7:34 pm
image

சந்தேகநபர் மற்றும் பொலிஸார் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூன்று பொலிஸார் உயிரிழந்ததுடன் சந்தேகநபரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  


இந்தப் பயங்கரம் அமெரிக்காவின் மத்திய பென்சில்வேனியாவில் உள்ள யாக் கவுண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 


குற்ற வழக்கு தொடர்பாக ஒருவரைக் கைது செய்ய குறித்த பகுதிக்கு அமெரிக்க  பொலிஸார் சென்றுள்ளனர். 

 

அதன்போது பொலிஸார் மீது  குறித்த சந்தேகநபர்  ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.  துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 3  பொலிஸ் அதிகாரிகள்  உயிரிழந்துள்ளனர். அத்துடன்  இரண்டு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த நபரின்  அடையாளத்தை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. 


துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக  விசாரணைகளை அமெரிக்க பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகநபர், பொலிஸார் இடையே துப்பாக்கிச்சூடு; பொலிஸார் மூவர் பலி - சந்தேகநபரும் சுட்டுக்கொலை சந்தேகநபர் மற்றும் பொலிஸார் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூன்று பொலிஸார் உயிரிழந்ததுடன் சந்தேகநபரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  இந்தப் பயங்கரம் அமெரிக்காவின் மத்திய பென்சில்வேனியாவில் உள்ள யாக் கவுண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. குற்ற வழக்கு தொடர்பாக ஒருவரைக் கைது செய்ய குறித்த பகுதிக்கு அமெரிக்க  பொலிஸார் சென்றுள்ளனர்.  அதன்போது பொலிஸார் மீது  குறித்த சந்தேகநபர்  ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.  துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 3  பொலிஸ் அதிகாரிகள்  உயிரிழந்துள்ளனர். அத்துடன்  இரண்டு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த நபரின்  அடையாளத்தை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக  விசாரணைகளை அமெரிக்க பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement