• Sep 19 2025

செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வுப்பணி எப்போது? நீதிமன்றத்தின் அறிவிப்பு

Chithra / Sep 18th 2025, 12:57 pm
image


செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார். 

பாதீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்று, வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்கான அறிக்கையை பெற்றுக் கொள்ள தவணையிட்டுள்ளது.

ஒக்ரோபர் முதலாம்  திகதி பாதீடு நிறைவேற்றப்படுமாக இருந்தால் ஒக்ரோபர் 21ம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வுப்பணி எப்போது நீதிமன்றத்தின் அறிவிப்பு செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார். பாதீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்று, வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்கான அறிக்கையை பெற்றுக் கொள்ள தவணையிட்டுள்ளது.ஒக்ரோபர் முதலாம்  திகதி பாதீடு நிறைவேற்றப்படுமாக இருந்தால் ஒக்ரோபர் 21ம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement