• May 10 2026

தங்க விலையில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம்

Chithra / Sep 18th 2025, 3:07 pm
image


இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது சற்று  குறைவடைந்துள்ளது.

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (18) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 298,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 275,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,250 ரூபாயாகவும், 

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,450 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

தங்க விலையில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம் இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது சற்று  குறைவடைந்துள்ளது.நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (18) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 298,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 275,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,450 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement