வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கூறி பெற்றோர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பற்றாக்குறை தொடர்பாக பலமுறை வலயக்கல்வி பணிமனை மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை இதற்கு ஒரு தீர்வினையும் பெற்றுத்தரவில்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக வவுனியா வடக்குவலயக் கல்விப்பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது விரைவில் இவ்வாசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்தார்.
ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிப்பு; வவுனியாவில் வீதிக்கிறங்கிய பெற்றோர்கள் வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கூறி பெற்றோர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த பற்றாக்குறை தொடர்பாக பலமுறை வலயக்கல்வி பணிமனை மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை இதற்கு ஒரு தீர்வினையும் பெற்றுத்தரவில்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக வவுனியா வடக்குவலயக் கல்விப்பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது விரைவில் இவ்வாசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்தார்.