• Sep 19 2025

நண்பனை போத்தலால் அடித்து நீரில் மூழ்கடித்து கொடூர கொலை

Chithra / Sep 18th 2025, 3:46 pm
image


ஹம்பாந்தோட்ட, திஸ்ஸமஹாராம பகுதியில் தனது நண்பரை போத்தலால் அடித்துக் கொலை செய்து நீரில் மூழ்கடித்த நபர் ஒருவர் நேற்று  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவின் சந்துங்கம பிரகதி மாவத்தை பகுதியில் உள்ள கால்வாயிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து நேற்று மாலை திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 

உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 45 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

தனிப்பட்ட தகராறு காரணமாக தனது நண்பர் ஒருவரால் போத்தலால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பாக 24 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


நண்பனை போத்தலால் அடித்து நீரில் மூழ்கடித்து கொடூர கொலை ஹம்பாந்தோட்ட, திஸ்ஸமஹாராம பகுதியில் தனது நண்பரை போத்தலால் அடித்துக் கொலை செய்து நீரில் மூழ்கடித்த நபர் ஒருவர் நேற்று  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவின் சந்துங்கம பிரகதி மாவத்தை பகுதியில் உள்ள கால்வாயிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மாலை திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 45 வயதானவர் என தெரியவந்துள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக தனது நண்பர் ஒருவரால் போத்தலால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக 24 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement