• Nov 21 2024

சஜித் - அநுரவின் பேரணிகளுக்கு பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட பெருந்தொகை மக்கள்!

Chithra / Sep 17th 2024, 12:34 pm
image


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார உள்ளிட்ட ஏனைய கட்சிகள் தமது பேரணிகளுக்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் ஆட்களை அழைத்து வந்தே பிரசாரத்தை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டத்துக்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும் என தெரிவித்துள்ளார்.

வெல்லவாயயில் நேற்று (16) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

இந்த மாவட்டத்திற்கு வெளியே யாரேனும் பேரணியில் பங்கேற்றிருந்தால், அதை நிரூபிக்குமாறு அச்சமின்றி சவால் விடுகிறேன்.

சஜித் பிரேமதாச 2022இல் போராட்ட களத்திற்கு சென்று சுசந்திகா ஜயசிங்கவை விட வேகமாக ஓடினார்.

அநுரகுமார திசாநாயக்க போராட்டம் நடந்த பகுதிக்கு வந்து, "நாம் வீதியில் பார்த்துக்கொள்வோம்" என்று கூறி இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொன்றார்.

ஒவ்வொரு நகரத்திலும் டிரான்ஸ் போர்மர்கள் மற்றும் பேருந்துகள் எரிக்கப்பட்டன.

அப்போது நாட்டைப் பொறுப்பேற்க யாரும் இல்லை. இதைப் பொறுப்பேற்றால் இரண்டு வருடங்களின் பின்னர் என்னால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக முடியாது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டைப் பொறுப்பேற்க முடியாது என்று அனைத்துத் தலைவர்களும் கூறியபோது, ரணில் விக்ரமசிங்க தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும், நாட்டைப் பொறுப்பேற்று இரண்டு வருடங்களுக்குள் வரிசைகளை இல்லாதொழித்தார்.

இன்று மக்கள், ரணில் விக்ரமசிங்கவை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய மற்றும் வரிசைகளை நீக்கிய நாயகனாக மதிக்கின்றார்கள். என்றார். 

சஜித் - அநுரவின் பேரணிகளுக்கு பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட பெருந்தொகை மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார உள்ளிட்ட ஏனைய கட்சிகள் தமது பேரணிகளுக்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் ஆட்களை அழைத்து வந்தே பிரசாரத்தை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார குற்றம் சுமத்தியுள்ளார்.எனினும் ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டத்துக்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும் என தெரிவித்துள்ளார்.வெல்லவாயயில் நேற்று (16) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்த மாவட்டத்திற்கு வெளியே யாரேனும் பேரணியில் பங்கேற்றிருந்தால், அதை நிரூபிக்குமாறு அச்சமின்றி சவால் விடுகிறேன்.சஜித் பிரேமதாச 2022இல் போராட்ட களத்திற்கு சென்று சுசந்திகா ஜயசிங்கவை விட வேகமாக ஓடினார்.அநுரகுமார திசாநாயக்க போராட்டம் நடந்த பகுதிக்கு வந்து, "நாம் வீதியில் பார்த்துக்கொள்வோம்" என்று கூறி இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொன்றார்.ஒவ்வொரு நகரத்திலும் டிரான்ஸ் போர்மர்கள் மற்றும் பேருந்துகள் எரிக்கப்பட்டன.அப்போது நாட்டைப் பொறுப்பேற்க யாரும் இல்லை. இதைப் பொறுப்பேற்றால் இரண்டு வருடங்களின் பின்னர் என்னால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக முடியாது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.நாட்டைப் பொறுப்பேற்க முடியாது என்று அனைத்துத் தலைவர்களும் கூறியபோது, ரணில் விக்ரமசிங்க தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும், நாட்டைப் பொறுப்பேற்று இரண்டு வருடங்களுக்குள் வரிசைகளை இல்லாதொழித்தார்.இன்று மக்கள், ரணில் விக்ரமசிங்கவை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய மற்றும் வரிசைகளை நீக்கிய நாயகனாக மதிக்கின்றார்கள். என்றார். 

Advertisement

Advertisement

Advertisement