ஊழலில் ஈடுபடுபவர்களிடம் இருந்து நாட்டை மீட்பதற்கான இறுதி வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
'ஊழலை தடுப்போம் நாட்டை மீட்போம்' என்ற பெயரில் நுகேகொடையில் நேறறைய தினம் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களை ஒரு புறமும், அவர்களை எதிர்ப்பவர்களை ஒரு புறமும் அமர்த்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழலை எதிர்த்தவர்களுக்கே நாட்டை கட்டியெழுப்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சன்ன ஜயசுமன, லலித் எல்லாவல உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டை மீட்பதற்கான இறுதி வாய்ப்பு - ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு.samugammedia ஊழலில் ஈடுபடுபவர்களிடம் இருந்து நாட்டை மீட்பதற்கான இறுதி வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.'ஊழலை தடுப்போம் நாட்டை மீட்போம்' என்ற பெயரில் நுகேகொடையில் நேறறைய தினம் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களை ஒரு புறமும், அவர்களை எதிர்ப்பவர்களை ஒரு புறமும் அமர்த்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஊழலை எதிர்த்தவர்களுக்கே நாட்டை கட்டியெழுப்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சன்ன ஜயசுமன, லலித் எல்லாவல உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.