உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சிலாபம் பகுதியில் குறித்த சட்டத்தரணியை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு, சட்டத்தரணி தனக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மெசெஞ்சர் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக குற்றம் சாட்டி உயர் நீதிமன்ற நீதிபதி முறைப்பாடு அளித்திருந்தார்.
அதன்படி, சம்பவம் தொடர்பான உண்மைகளை பொலிஸார் ஆராய்ந்து சட்டமா அதிபருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சட்டத்தரணியின் நடவடிக்கை பாலியல் துன்புறுத்தலாக வகைப்படுத்தப்படும் என்றும், அவருக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி கைது உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சிலாபம் பகுதியில் குறித்த சட்டத்தரணியை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு, சட்டத்தரணி தனக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மெசெஞ்சர் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக குற்றம் சாட்டி உயர் நீதிமன்ற நீதிபதி முறைப்பாடு அளித்திருந்தார்.அதன்படி, சம்பவம் தொடர்பான உண்மைகளை பொலிஸார் ஆராய்ந்து சட்டமா அதிபருக்கு தகவல் அளித்துள்ளனர்.இந்நிலையில், குறித்த சட்டத்தரணியின் நடவடிக்கை பாலியல் துன்புறுத்தலாக வகைப்படுத்தப்படும் என்றும், அவருக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.