• Jan 26 2025

நீதிமன்றில் பிள்ளையான் சாணக்கியனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன்

Tharmini / Jan 23rd 2025, 5:08 pm
image

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்திற்கு எதிராக பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கல்கிஸ்சை நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் சாணக்யன் இராசமாணிக்கம் சார்பாக சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக சாணக்கியன் இராசமாணிக்கத்திற்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்றைய முதல் நிலைத் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. முறைப்பாட்டாளர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று (23) சமூகமளிக்கவில்லை.

தொடர் கருத்துக்களை முன்வைப்பதாக அவர் கூறினார். இதற்கு பிரதிவாதியே பதிலளிக்க வேண்டும் என்றார். ஆனால், இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று எங்கள் தரப்பில் கூறப்பட்டது. எனினும் இன்று (23) ஆரம்பகட்ட விசாரணைக்கு தயாராக இல்லாத காரணத்தினால் வாதிக்கு நீதிமன்றக் கட்டணமாக ஐம்பதாயிரம் ரூபாவை பிரதிவாதிக்கு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. என்றார், பிள்ளையான் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




நீதிமன்றில் பிள்ளையான் சாணக்கியனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்திற்கு எதிராக பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கல்கிஸ்சை நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் சாணக்யன் இராசமாணிக்கம் சார்பாக சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக சாணக்கியன் இராசமாணிக்கத்திற்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய முதல் நிலைத் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. முறைப்பாட்டாளர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று (23) சமூகமளிக்கவில்லை.தொடர் கருத்துக்களை முன்வைப்பதாக அவர் கூறினார். இதற்கு பிரதிவாதியே பதிலளிக்க வேண்டும் என்றார். ஆனால், இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று எங்கள் தரப்பில் கூறப்பட்டது. எனினும் இன்று (23) ஆரம்பகட்ட விசாரணைக்கு தயாராக இல்லாத காரணத்தினால் வாதிக்கு நீதிமன்றக் கட்டணமாக ஐம்பதாயிரம் ரூபாவை பிரதிவாதிக்கு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. என்றார், பிள்ளையான் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement