• Nov 26 2024

20 வெசாக் தானங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை..!

Chithra / May 26th 2024, 11:07 am
image

 

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 20 ஆயிரம் வெசாக் தானங்களில், சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 20 வெசாக் தானங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 4 ஆயிரம் வெசாக் தானங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 5 வெசாக் தானங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கொத்து, பிரைட் ரைஸ் , கடலை , பாண் , மரவள்ளிக்கிழங்கு மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட வெசாக் தானங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 வெசாக் தானங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை.  வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 20 ஆயிரம் வெசாக் தானங்களில், சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 20 வெசாக் தானங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 4 ஆயிரம் வெசாக் தானங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 5 வெசாக் தானங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்போது, கொத்து, பிரைட் ரைஸ் , கடலை , பாண் , மரவள்ளிக்கிழங்கு மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட வெசாக் தானங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.இந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement