• Feb 07 2025

சீரற்ற வானிலையால் தொடரும் மரணங்கள்...! மரம் முறிந்து பெண் உயிரிழப்பு

Chithra / May 26th 2024, 11:05 am
image

பதுளை - ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கெடிய வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீட்டில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 65 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் 80 வயதுடைய ஆண் ஒருவரும் 73 வயதுடைய பெண் ஒருவரும் பலத்த காயமடைந்த நிலையில் பங்கெடிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்,

மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் மரணித்த பெண் மரம் முறிந்து விழுந்த வீட்டில் சுமார் 20 வருட காலமாக வீட்டு வேலை பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற வானிலையால் தொடரும் மரணங்கள். மரம் முறிந்து பெண் உயிரிழப்பு பதுளை - ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கெடிய வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீட்டில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 65 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவத்தில் 80 வயதுடைய ஆண் ஒருவரும் 73 வயதுடைய பெண் ஒருவரும் பலத்த காயமடைந்த நிலையில் பங்கெடிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்,மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவத்தில் மரணித்த பெண் மரம் முறிந்து விழுந்த வீட்டில் சுமார் 20 வருட காலமாக வீட்டு வேலை பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement