• Nov 26 2024

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Chithra / Mar 28th 2024, 2:37 pm
image

 

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல்  விசாரணை ஆணைக்குழு   தெரிவித்துள்ளது.

இதன்படி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவானது கொழும்பு மேல் நீதிமன்றில் HCB 271/2024  என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவினால் கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்த போது அந்நாட்டு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட திறைசேரி உண்டியல்களை மத்திய வங்கி கொள்வனவு செய்தமை தொடர்பில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டிருந்தது.

கிரீஸ் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியை அறிந்திருந்தும் மேற்கொள்ளப்பட்ட இந்த கொள்வனவினால் 2000 கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சேனசிங்க தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அஜித் நிவாட் கப்ரால், கங்கணம்கே கமகே டொன் தர்மசேன தீரசிங்க, பெந்தரகே டொன் வசந்த ஆனந்த சில்வா, சந்திரசிறி ஜயசிங்க பண்டித சிறிவர்தன மற்றும் ஹரங்கஹா ஆராச்சிலகே கருணாரத்ன ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல்  விசாரணை ஆணைக்குழு   தெரிவித்துள்ளது.இதன்படி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவானது கொழும்பு மேல் நீதிமன்றில் HCB 271/2024  என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவினால் கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2012ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்த போது அந்நாட்டு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட திறைசேரி உண்டியல்களை மத்திய வங்கி கொள்வனவு செய்தமை தொடர்பில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டிருந்தது.கிரீஸ் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியை அறிந்திருந்தும் மேற்கொள்ளப்பட்ட இந்த கொள்வனவினால் 2000 கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சேனசிங்க தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், அஜித் நிவாட் கப்ரால், கங்கணம்கே கமகே டொன் தர்மசேன தீரசிங்க, பெந்தரகே டொன் வசந்த ஆனந்த சில்வா, சந்திரசிறி ஜயசிங்க பண்டித சிறிவர்தன மற்றும் ஹரங்கஹா ஆராச்சிலகே கருணாரத்ன ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement