• Nov 28 2024

சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சட்ட ஏற்பாடுகள் முன்னெடுப்பு...!samugammedia

Sharmi / Jan 31st 2024, 1:22 pm
image

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதை துரிதப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சாந்தனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சட்ட ஏற்பாடுகளை இந்தியாவுக்கான இலங்கை தூதரகம் ஆரம்பித்துள்ளதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சாந்தனின் தாயாரால், இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு வழங்கப்பட்ட கடிதத்தை மேற்கோள்காட்டி அமைச்சருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலையடுத்து,சாந்தனை நாட்டு அழைத்து வருவதற்கு தேவையான உரிய ஆவணங்களை, குறித்த கடிதத்துடன் இணைத்து இந்தியாவுக்கான இலங்கை தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் இவ்விடயத்தில் உரிய கவனத்தை செலுத்துவதாகவும்,வெளிவிவகார அமைச்சிலிருந்து எனக்கு இன்று(31) காலை அறிவித்திருந்ததாகவும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.


சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சட்ட ஏற்பாடுகள் முன்னெடுப்பு.samugammedia இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதை துரிதப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சாந்தனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சட்ட ஏற்பாடுகளை இந்தியாவுக்கான இலங்கை தூதரகம் ஆரம்பித்துள்ளதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,சாந்தனின் தாயாரால், இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு வழங்கப்பட்ட கடிதத்தை மேற்கோள்காட்டி அமைச்சருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலையடுத்து,சாந்தனை நாட்டு அழைத்து வருவதற்கு தேவையான உரிய ஆவணங்களை, குறித்த கடிதத்துடன் இணைத்து இந்தியாவுக்கான இலங்கை தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் இவ்விடயத்தில் உரிய கவனத்தை செலுத்துவதாகவும்,வெளிவிவகார அமைச்சிலிருந்து எனக்கு இன்று(31) காலை அறிவித்திருந்ததாகவும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement