• Mar 17 2026

தேயிலைத் தோட்டத்தில் அமைத்த கம்பி வலையில் சிக்கி சிறுத்தைப் புலி உயிரிழப்பு!

shanu / Feb 10th 2026, 11:48 am
image

பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பிரிவில் காட்டுப் பன்றிகள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி, சுமார் 4 அடி நீளமான அரிய வகை மலைச் சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது.


குறித்த பகுதியில் இன்று காலை சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்ததையடுத்து  தோட்டத் தொழிலாளி ஒருவர் அதனைக் கண்டு பொகவந்தலாவ  பொலிசாருக்கு அறிவித்துள்ளார். 


உயிரிழந்த சிறுத்தையின் உடல் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளால் பொறுப்பேற்க பட்டுள்ளதுடன், மேலதிக பரிசோதனைகளுக்காக ரந் தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.


இவ்வாறான சட்டவிரோத வேட்டையாடல் முறைகளால் எமது நாட்டின் அரிய வகை உயிரினங்கள் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வலையிட்ட  நபரைக் கண்டறிய வனவிலங்கு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இச் சம்பவம் குறித்து நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொகவந்தலாவ பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இறந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை இன்று ஹட்டன் நீதி மன்ற நீதிவான் முன்னிலையில் கொண்டு செல்ல பட்டு அங்கு அவரது உத்தரவின் பேரில் உடட் கூற்று பரிசோதனை செய்ய ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது என நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேயிலைத் தோட்டத்தில் அமைத்த கம்பி வலையில் சிக்கி சிறுத்தைப் புலி உயிரிழப்பு பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பிரிவில் காட்டுப் பன்றிகள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி, சுமார் 4 அடி நீளமான அரிய வகை மலைச் சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது.குறித்த பகுதியில் இன்று காலை சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்ததையடுத்து  தோட்டத் தொழிலாளி ஒருவர் அதனைக் கண்டு பொகவந்தலாவ  பொலிசாருக்கு அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுத்தையின் உடல் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளால் பொறுப்பேற்க பட்டுள்ளதுடன், மேலதிக பரிசோதனைகளுக்காக ரந் தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.இவ்வாறான சட்டவிரோத வேட்டையாடல் முறைகளால் எமது நாட்டின் அரிய வகை உயிரினங்கள் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வலையிட்ட  நபரைக் கண்டறிய வனவிலங்கு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இச் சம்பவம் குறித்து நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொகவந்தலாவ பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இறந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை இன்று ஹட்டன் நீதி மன்ற நீதிவான் முன்னிலையில் கொண்டு செல்ல பட்டு அங்கு அவரது உத்தரவின் பேரில் உடட் கூற்று பரிசோதனை செய்ய ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது என நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement