• Aug 05 2026

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்... மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்

Aathira / Aug 5th 2026, 1:58 pm
image

குழந்தைகளின் பசியை முடிவுக்குக் கொண்டு வந்து, அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் “ENOUGH Campaign” அமைப்பின் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பரிசளிப்பு விழா இன்று (05) மூதூரில் நடைபெற்றது.

“எந்தவொரு குழந்தையும் பசியால் பாதிக்கப்படக் கூடாது” என்ற நோக்கத்தை முன்வைத்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வில், குழந்தைகளின் உடல் வளர்ச்சி, கல்வி, ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தை பசி எவ்வாறு பாதிக்கிறது என்பது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குழந்தைகளுக்கு தேவையான சத்தான உணவு, அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதற்கு குடும்பங்கள், சமூகங்கள், அரசாங்கம் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம் மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி, பிரதான வீதி ஊடாக பயணித்து மூதூர் கலாசார மண்டபத்தை சென்றடைந்தது.

இதில் மூதூர் பிரதேச செயலக ஊழியர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

பங்கேற்பாளர்கள் குழந்தைகளுக்கான சத்தான உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மூதூர் கலாசார மண்டபத்தில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

World Vision நிறுவனத்தின் அனுசரணையுடன், அதன் பணிப்பாளர் V. J. அருன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மூதூர் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மூதூர் வலய கல்விப் பணிப்பாளர் A. L. சிராஜ், மூதூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி N. M. கஸ்ஸாலி, மூதூர் பிரதேச சபை உதவி தவிசாளர் P.T. பைஸர், பிரதேச சபை செயலாளர் I. M. ஜெம்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழ் கலையை ஊக்குவிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மாணவர்களின் கலை மற்றும் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

போதுமான சத்தான உணவு, தூய்மையான குடிநீர், சிறந்த சுகாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்கு பசியற்ற எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்ற செய்தியை இந்த ENOUGH Campaign விழிப்புணர்வு நிகழ்வு மூதூர் மக்களிடம் கொண்டு சென்றுள்ளது.


குழந்தைகளின் பசியை ஒழிப்போம். மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம் குழந்தைகளின் பசியை முடிவுக்குக் கொண்டு வந்து, அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் “ENOUGH Campaign” அமைப்பின் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பரிசளிப்பு விழா இன்று (05) மூதூரில் நடைபெற்றது.“எந்தவொரு குழந்தையும் பசியால் பாதிக்கப்படக் கூடாது” என்ற நோக்கத்தை முன்வைத்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வில், குழந்தைகளின் உடல் வளர்ச்சி, கல்வி, ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தை பசி எவ்வாறு பாதிக்கிறது என்பது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.குழந்தைகளுக்கு தேவையான சத்தான உணவு, அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதற்கு குடும்பங்கள், சமூகங்கள், அரசாங்கம் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்த விழிப்புணர்வு ஊர்வலம் மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி, பிரதான வீதி ஊடாக பயணித்து மூதூர் கலாசார மண்டபத்தை சென்றடைந்தது.இதில் மூதூர் பிரதேச செயலக ஊழியர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.பங்கேற்பாளர்கள் குழந்தைகளுக்கான சத்தான உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து மூதூர் கலாசார மண்டபத்தில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.World Vision நிறுவனத்தின் அனுசரணையுடன், அதன் பணிப்பாளர் V. J. அருன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மூதூர் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.சிறப்பு அதிதிகளாக மூதூர் வலய கல்விப் பணிப்பாளர் A. L. சிராஜ், மூதூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி N. M. கஸ்ஸாலி, மூதூர் பிரதேச சபை உதவி தவிசாளர் P.T. பைஸர், பிரதேச சபை செயலாளர் I. M. ஜெம்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மேலும், தமிழ் கலையை ஊக்குவிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.அத்துடன் மாணவர்களின் கலை மற்றும் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.போதுமான சத்தான உணவு, தூய்மையான குடிநீர், சிறந்த சுகாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்கு பசியற்ற எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்ற செய்தியை இந்த ENOUGH Campaign விழிப்புணர்வு நிகழ்வு மூதூர் மக்களிடம் கொண்டு சென்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement