• Sep 20 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை சஜித் அரசாங்கத்தில் வெளிப்படுத்துவோம்...!சபையில் நளின் பண்டார சூளுரை...!

Sharmi / Apr 1st 2024, 4:40 pm
image

Advertisement

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை வெளிப்படுத்துவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரை அழைத்து விசாரணைகளை நடத்துவதாகக் கூறினாலும் இதுவரை அது நடைபெறவில்லை.

ரணில் மாத்திரமல்ல அரசாங்கத்துடன் தொடர்புடைய எமது பக்கமிருந்த ஹரின் பெர்னாண்டோவும் இதனை ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரிடம் ஒப்படைப்போம் என, ஆனால் ஒப்படைக்கவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிக்கும் செயற்பாட்டை இழுத்தடிப்பு செய்வது ஏன் எனவும் கேள்வியெழுப்பினார்.

ரணிலுக்கு ஜனாதிபதியாக  இந்த  உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கைது செய்வதற்கு தம்மை பாதுகாக்கின்ற தம்மை ஆட்சிக்கு கொண்டு தரப்பிலிருந்து ஒரு தரப்பினரையே  தான் கைது செய்ய வேண்டும்.

எனவே தான் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாருக்கு ஒப்படைப்பதாக கூறிய அப்போதிருந்த ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியான பின் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரை யாருக்குமே ஒப்படைக்காமல் இருப்பதற்கு இடமளித்திருக்கின்றார்.

எனவே, உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி யாருமல்ல, அவருக்கு ஒத்துழைப்பு செய்கின்ற தரப்பினர் என்பதை ரணில் அறிவார்.

எனவே, ஜனாதிபதி ஆசனத்திற்கு வந்தபின்னர் ரணிலும் வழமையான வகையில் காலத்தை இழுத்தடிப்பு செய்து அதனை மூடும் நிலைக்கு இட்டுச் செல்கின்றார்.

ஹரின் பெர்னாண்டோவும் எமது தரப்போடு இருக்கும்போது முதலைக் கண்ணீர் வடித்தார். கறுப்பு பட்டி கட்டினார், கறுப்பு சால்வை போட்டார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் தாக்குதலின் சூத்திரதாரி கண்டுபிடிக்க முடியாமை மற்றும் அதற்கு நடவடிக்கை எடுக்காமை என்பது ஒரு குரோதமான மனப்பாங்கு.

தமது அதிகாரத்திற்காக பெரும் கொடுங்கோல் நடவடிக்கையை செய்தவர்களை மூடிமறைப்பதுடன் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஜனாதிபதியாக இவர் இருக்கின்றார்.

இன்று இந்த நாட்டு மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு தண்டணை வழங்குவதற்கு காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் சட்டத்தினால் தண்டனை வழங்கப்பட மாட்டாது.

எனவே இந்த  உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்தியவர்கள் மற்றும் குற்றவாளிகளை மூடி மறைத்தவர்களுக்கு தண்டணை வழங்கும் சந்தர்ப்பம் எதிர்வரும் தேர்தல் மூலம் கிடைத்துள்ளது.

எனவே அவர்களுக்கு தண்டணை வழங்குவதை போல மீண்டும் இவ்வாறானதொரு சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கும் மீண்டும் இந்த நாடு வங்குரோத்து அடையாமல் இருப்பதற்கும் கூடிய ஒரு தரப்பினருக்கு மத்தியில் இந்த அதிகாரம் பகிரப்படவேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பு.

அதேவேளை எதிர்க்கட்சியாக அதேவேளை எதிர்வரும் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளவுள்ள ஒரு தரப்பாக சகல விடயங்கள் தொடர்பிலும் கூர்மையாக நாங்கள் பாத்துக்கொண்டிருக்கின்றோம்.

எமது  தலைவரான சஜித் பிரேமதாசவும் இந்த விடயங்களை  தொடர்ச்சியாக முன்வைக்கின்றார்.

ஆகவே, மிக மிக குறுகிய காலத்தில் மக்கள் ஆணையில் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் போது இந் உண்மையை புரிந்துகொள்ள முடியும்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் கூற்றை பார்க்கின்ற போது அவரை யாரோ வழிப்படுத்துவதாகவும் இருக்கலாம் அல்லது வழமை போன்று  அவரது இயலாமையுடன் இதை மறைப்பதற்கு செய்கின்ற ஒரு விடயமாகவும் இருக்கலாம்.

எனினும் மைத்திரி வெளிப்படுத்திய கூற்று மிகவும் பாராதூரமானது.  இதன்காரணமாக குற்றப் புலனாய்வு பிரிவினர் இது தொடர்பில் விசாரணை நடாத்தி மைத்திரி வெளிப்படுத்தும் பிரதான சூத்திரதாரி யார் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

மைத்திரி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டார். அவர் மீது விசாரணை நடந்தது. அதற்கு அப்பால் என்ன நடந்தது என்பதை அறிய நாட்டு மக்கள் காத்திருக்கின்றார்கள்.

எனவே மைத்திரி கூறும் பிரதான சூத்திரதாரி யார் என்பதை இப்போதாவது எமக்கு  வெளிப்படுத்த முடியாமல் போனால் எம்முடைய அரசாங்கம் அதனை வெளிப்படுத்தும்.

மைத்திரியின் கூற்றை அடிப்படையாக வைத்து இதை விரைவாக நீதி நியாயம் கிடைக்கப்பெறவேண்டும். மிக மிக விரைவாக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும்  என்பதை அரசாங்கத்திற்கு வலியுறுத்தி கூற விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை சஜித் அரசாங்கத்தில் வெளிப்படுத்துவோம்.சபையில் நளின் பண்டார சூளுரை. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை வெளிப்படுத்துவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரை அழைத்து விசாரணைகளை நடத்துவதாகக் கூறினாலும் இதுவரை அது நடைபெறவில்லை.ரணில் மாத்திரமல்ல அரசாங்கத்துடன் தொடர்புடைய எமது பக்கமிருந்த ஹரின் பெர்னாண்டோவும் இதனை ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரிடம் ஒப்படைப்போம் என, ஆனால் ஒப்படைக்கவில்லை.இவ்வாறானதொரு நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிக்கும் செயற்பாட்டை இழுத்தடிப்பு செய்வது ஏன் எனவும் கேள்வியெழுப்பினார்.ரணிலுக்கு ஜனாதிபதியாக  இந்த  உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கைது செய்வதற்கு தம்மை பாதுகாக்கின்ற தம்மை ஆட்சிக்கு கொண்டு தரப்பிலிருந்து ஒரு தரப்பினரையே  தான் கைது செய்ய வேண்டும்.எனவே தான் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாருக்கு ஒப்படைப்பதாக கூறிய அப்போதிருந்த ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியான பின் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரை யாருக்குமே ஒப்படைக்காமல் இருப்பதற்கு இடமளித்திருக்கின்றார்.எனவே, உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி யாருமல்ல, அவருக்கு ஒத்துழைப்பு செய்கின்ற தரப்பினர் என்பதை ரணில் அறிவார்.எனவே, ஜனாதிபதி ஆசனத்திற்கு வந்தபின்னர் ரணிலும் வழமையான வகையில் காலத்தை இழுத்தடிப்பு செய்து அதனை மூடும் நிலைக்கு இட்டுச் செல்கின்றார்.ஹரின் பெர்னாண்டோவும் எமது தரப்போடு இருக்கும்போது முதலைக் கண்ணீர் வடித்தார். கறுப்பு பட்டி கட்டினார், கறுப்பு சால்வை போட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் தாக்குதலின் சூத்திரதாரி கண்டுபிடிக்க முடியாமை மற்றும் அதற்கு நடவடிக்கை எடுக்காமை என்பது ஒரு குரோதமான மனப்பாங்கு.தமது அதிகாரத்திற்காக பெரும் கொடுங்கோல் நடவடிக்கையை செய்தவர்களை மூடிமறைப்பதுடன் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஜனாதிபதியாக இவர் இருக்கின்றார்.இன்று இந்த நாட்டு மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு தண்டணை வழங்குவதற்கு காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் சட்டத்தினால் தண்டனை வழங்கப்பட மாட்டாது.எனவே இந்த  உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்தியவர்கள் மற்றும் குற்றவாளிகளை மூடி மறைத்தவர்களுக்கு தண்டணை வழங்கும் சந்தர்ப்பம் எதிர்வரும் தேர்தல் மூலம் கிடைத்துள்ளது.எனவே அவர்களுக்கு தண்டணை வழங்குவதை போல மீண்டும் இவ்வாறானதொரு சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கும் மீண்டும் இந்த நாடு வங்குரோத்து அடையாமல் இருப்பதற்கும் கூடிய ஒரு தரப்பினருக்கு மத்தியில் இந்த அதிகாரம் பகிரப்படவேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பு.அதேவேளை எதிர்க்கட்சியாக அதேவேளை எதிர்வரும் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளவுள்ள ஒரு தரப்பாக சகல விடயங்கள் தொடர்பிலும் கூர்மையாக நாங்கள் பாத்துக்கொண்டிருக்கின்றோம்.எமது  தலைவரான சஜித் பிரேமதாசவும் இந்த விடயங்களை  தொடர்ச்சியாக முன்வைக்கின்றார்.ஆகவே, மிக மிக குறுகிய காலத்தில் மக்கள் ஆணையில் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் போது இந் உண்மையை புரிந்துகொள்ள முடியும்.அதேவேளை முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் கூற்றை பார்க்கின்ற போது அவரை யாரோ வழிப்படுத்துவதாகவும் இருக்கலாம் அல்லது வழமை போன்று  அவரது இயலாமையுடன் இதை மறைப்பதற்கு செய்கின்ற ஒரு விடயமாகவும் இருக்கலாம்.எனினும் மைத்திரி வெளிப்படுத்திய கூற்று மிகவும் பாராதூரமானது.  இதன்காரணமாக குற்றப் புலனாய்வு பிரிவினர் இது தொடர்பில் விசாரணை நடாத்தி மைத்திரி வெளிப்படுத்தும் பிரதான சூத்திரதாரி யார் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.மைத்திரி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டார். அவர் மீது விசாரணை நடந்தது. அதற்கு அப்பால் என்ன நடந்தது என்பதை அறிய நாட்டு மக்கள் காத்திருக்கின்றார்கள்.எனவே மைத்திரி கூறும் பிரதான சூத்திரதாரி யார் என்பதை இப்போதாவது எமக்கு  வெளிப்படுத்த முடியாமல் போனால் எம்முடைய அரசாங்கம் அதனை வெளிப்படுத்தும்.மைத்திரியின் கூற்றை அடிப்படையாக வைத்து இதை விரைவாக நீதி நியாயம் கிடைக்கப்பெறவேண்டும். மிக மிக விரைவாக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும்  என்பதை அரசாங்கத்திற்கு வலியுறுத்தி கூற விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement