ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை விட, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சிலருக்கு அதிக கவலை இருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சி, சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்றையதினம்(6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பேராசிரியர் ரஞ்சித் பண்டார இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
துரதிஷ்டவசமாக நம் நாட்டைப் பொறுத்தவரை, பாரம்பரிய ஊடகங்களைத் தாண்டிய மரபுசாரா ஊடகங்கள், தற்போது வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளன.
ஊடகங்களின் தாக்கத்திற்கு ஆளானவர் என்ற வகையில், அனைத்து ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் இந்த வழக்கை விசாரிக்கும் பணியை நீதிமன்றத்திற்கே விட்டுவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இதேவேளை இந்த நாட்டின் நீதிமன்றங்கள் சுதந்திரமாகச் செயற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை எவரும் சந்தேக நபர் மட்டுமே என்பதை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.
சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்துவோம். மொட்டுக்கட்சி அதிரடி அறிவிப்பு.samugammedia ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை விட, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சிலருக்கு அதிக கவலை இருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சி, சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்றையதினம்(6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பேராசிரியர் ரஞ்சித் பண்டார இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,துரதிஷ்டவசமாக நம் நாட்டைப் பொறுத்தவரை, பாரம்பரிய ஊடகங்களைத் தாண்டிய மரபுசாரா ஊடகங்கள், தற்போது வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளன.ஊடகங்களின் தாக்கத்திற்கு ஆளானவர் என்ற வகையில், அனைத்து ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் இந்த வழக்கை விசாரிக்கும் பணியை நீதிமன்றத்திற்கே விட்டுவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.இதேவேளை இந்த நாட்டின் நீதிமன்றங்கள் சுதந்திரமாகச் செயற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.மேலும் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை எவரும் சந்தேக நபர் மட்டுமே என்பதை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.