• Nov 24 2024

நாமலை ஜனாதிபதியாக்கியே தீருவோம்- பொதுஜன பெரமுன எம்.பி சூளுரை..!

Sharmi / Sep 24th 2024, 9:58 am
image

நாமல் ராஜபக்சவை  ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்துவதற்கு  தொடர்ந்து பாடுபடவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாக நாம் எண்ணவில்லை. அரசியல் என்றால் இவ்வாறாகவே அமையும். 

புதிய ஜனாதிபதிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். 

இருப்பினும் நான் அநுரவுக்கு வாக்களிக்கவில்லை. நான் நாமல் ராஜபக்ஷவுக்கே வாக்களித்தேன்.

இளைஞரான அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியுமாக இருக்கும் என்பது என்னுடைய நிலைப்பாடாகவுள்ளது.

பெரும்பாண்மை மக்களின் ஆதரவு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்த நாட்டு மக்களின் நன்மைக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு நாம் ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம். 

பல உறுதிமொழிகளை அநுர வழங்கியுள்ளார்.

எம்முடைய நாடு சிங்கப்பூர் ஆக மாறுவதற்கு நாம் எதிர்ப்பை வெளியிடப்போவதில்லை.

எம்மால் மீண்டும் அரசியல் செய்ய முடியும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் நிச்சயம் பொது தேர்தலில் போட்டியிடுவோம். 

எதிர்வரும் 5 வருடங்களில் நாம் நிச்சயம் தலைவரை உருவாக்குவோம். அந்தவகையில் நாமல் ராஜபக்வை ஜனதிபதியாக்கும் திட்டத்தை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தார்.



நாமலை ஜனாதிபதியாக்கியே தீருவோம்- பொதுஜன பெரமுன எம்.பி சூளுரை. நாமல் ராஜபக்சவை  ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்துவதற்கு  தொடர்ந்து பாடுபடவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாக நாம் எண்ணவில்லை. அரசியல் என்றால் இவ்வாறாகவே அமையும். புதிய ஜனாதிபதிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இருப்பினும் நான் அநுரவுக்கு வாக்களிக்கவில்லை. நான் நாமல் ராஜபக்ஷவுக்கே வாக்களித்தேன்.இளைஞரான அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியுமாக இருக்கும் என்பது என்னுடைய நிலைப்பாடாகவுள்ளது.பெரும்பாண்மை மக்களின் ஆதரவு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்த நாட்டு மக்களின் நன்மைக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு நாம் ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம். பல உறுதிமொழிகளை அநுர வழங்கியுள்ளார்.எம்முடைய நாடு சிங்கப்பூர் ஆக மாறுவதற்கு நாம் எதிர்ப்பை வெளியிடப்போவதில்லை.எம்மால் மீண்டும் அரசியல் செய்ய முடியும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் நிச்சயம் பொது தேர்தலில் போட்டியிடுவோம். எதிர்வரும் 5 வருடங்களில் நாம் நிச்சயம் தலைவரை உருவாக்குவோம். அந்தவகையில் நாமல் ராஜபக்வை ஜனதிபதியாக்கும் திட்டத்தை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement