• Jan 26 2025

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான உதவி பணியாளர்களை நியமிப்பதில் வரம்பு!

Chithra / Jan 23rd 2025, 10:49 am
image

 

தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் உதவிக்கும் அலுவலக தேவைகளுக்கும் உதவி பணியாளர்கள் நியமிப்பதில், அதிகபட்ச பணியாளர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமைச்சர்களுக்கான உதவி பணியாளர்கள் அதிகபட்சமாக 15 பேரும், பிரதி அமைச்சர்களுக்கு 12 பேரும் மட்டுமே இருக்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் பணிகளை மிகவும் திறமையாகவும், அனைத்து தரப்பினருடனும் நல்ல ஒருங்கிணைப்புடனும் மேற்கொள்வதற்கு இந்த உதவி பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

அலுவலக வேலைவாய்ப்பு  அதிகபட்ச எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கக்கூடாது என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமாநாயக்க அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்க அமைச்சர்களின் பணிகளை இலகுபடுத்தும் வகையிலும், கொள்கை வகுக்கும் செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையிலும் நேற்று (22) அறிவுறுத்தல் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சுக்களுக்கான ஆலோசகர்களை எவ்வாறு நியமிப்பது, அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் உதவிப் பணியாளர்களை எவ்வாறு நியமிப்பது என்பன தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மேலும், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பாவனைக்காக ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனங்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு, அமைச்சர்களுக்கு வழங்கப்படும் தொலைபேசி இணைப்புகள், தொலைபேசி செலவுகள் போன்றவற்றை ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான உதவி பணியாளர்களை நியமிப்பதில் வரம்பு  தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் உதவிக்கும் அலுவலக தேவைகளுக்கும் உதவி பணியாளர்கள் நியமிப்பதில், அதிகபட்ச பணியாளர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அமைச்சர்களுக்கான உதவி பணியாளர்கள் அதிகபட்சமாக 15 பேரும், பிரதி அமைச்சர்களுக்கு 12 பேரும் மட்டுமே இருக்க வேண்டும்.அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் பணிகளை மிகவும் திறமையாகவும், அனைத்து தரப்பினருடனும் நல்ல ஒருங்கிணைப்புடனும் மேற்கொள்வதற்கு இந்த உதவி பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.அலுவலக வேலைவாய்ப்பு  அதிகபட்ச எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கக்கூடாது என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமாநாயக்க அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.தற்போதைய அரசாங்க அமைச்சர்களின் பணிகளை இலகுபடுத்தும் வகையிலும், கொள்கை வகுக்கும் செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையிலும் நேற்று (22) அறிவுறுத்தல் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அமைச்சுக்களுக்கான ஆலோசகர்களை எவ்வாறு நியமிப்பது, அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் உதவிப் பணியாளர்களை எவ்வாறு நியமிப்பது என்பன தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.மேலும், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பாவனைக்காக ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனங்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு, அமைச்சர்களுக்கு வழங்கப்படும் தொலைபேசி இணைப்புகள், தொலைபேசி செலவுகள் போன்றவற்றை ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement