• Nov 22 2024

மதுபானசாலை அனுமதிப் பத்திர விவகாரம்- சி.வி விக்னேஸ்வரன் விளக்கம்..!

Sharmi / Oct 1st 2024, 4:18 pm
image

என்னிடம்  உதவி கேட்க வருபவர்களுக்கு  சிபாரிசு கடிதம் கொடுப்பது வழமை. அந்த வகையில் மதுபான நிலையம் ஒன்றை பெறுவதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிபாரிசு தேவைப்பட்டதால் அதனை நான் வழங்கியது உண்மை தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் நேற்றையதினம்(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது,  ஊடகவியலாளர் ஒருவர் தாங்கள் மதுபான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான சிபாரிசு கடிதம் ஒன்றை வழங்கியமை தொடர்பில் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த  சி. வி விக்னேஸ்வரன், 

என்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு நான் அவர்களை நன்கு அறிந்திருந்தால் சிபாரிசு கடிதம் கொடுப்பது வழமை.

இவ்வாறு எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் தாங்களுக்குத் தேவையானவர்களுக்கு சிபாரிசுக் கடிதங்களை வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவர்.

எனக்கு மதுபான நிலைத்திற்கு சிபாரிசு  வழங்கி வருமானம் பெற வேண்டிய தேவை இல்லை அதனை நான் இந்த காலத்திலும் விரும்பியதும் இல்லை. 

நான் சிபாரிசு வழங்கியது மட்டும்தான் ஆனால் பலர் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற நிலையில் இதனை ஒரு பூதாரமாக என்னை அரசியல் நீதியில் தாக்க வேண்டும் என்பதற்காக சிலர் செய்த வேலை என அவர் மேலும் தெரிவித்தார்.


மதுபானசாலை அனுமதிப் பத்திர விவகாரம்- சி.வி விக்னேஸ்வரன் விளக்கம். என்னிடம்  உதவி கேட்க வருபவர்களுக்கு  சிபாரிசு கடிதம் கொடுப்பது வழமை. அந்த வகையில் மதுபான நிலையம் ஒன்றை பெறுவதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிபாரிசு தேவைப்பட்டதால் அதனை நான் வழங்கியது உண்மை தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.அவரது இல்லத்தில் நேற்றையதினம்(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது,  ஊடகவியலாளர் ஒருவர் தாங்கள் மதுபான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான சிபாரிசு கடிதம் ஒன்றை வழங்கியமை தொடர்பில் கேள்வியெழுப்பினார்.அதற்கு பதிலளித்த  சி. வி விக்னேஸ்வரன், என்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு நான் அவர்களை நன்கு அறிந்திருந்தால் சிபாரிசு கடிதம் கொடுப்பது வழமை.இவ்வாறு எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் தாங்களுக்குத் தேவையானவர்களுக்கு சிபாரிசுக் கடிதங்களை வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவர்.எனக்கு மதுபான நிலைத்திற்கு சிபாரிசு  வழங்கி வருமானம் பெற வேண்டிய தேவை இல்லை அதனை நான் இந்த காலத்திலும் விரும்பியதும் இல்லை. நான் சிபாரிசு வழங்கியது மட்டும்தான் ஆனால் பலர் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற நிலையில் இதனை ஒரு பூதாரமாக என்னை அரசியல் நீதியில் தாக்க வேண்டும் என்பதற்காக சிலர் செய்த வேலை என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement