• Dec 14 2024

தேர்தலுக்காக தொழிலாளிகளின் சலுகைகளை தடுக்காதீர்; தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் புகார்

Anaath / Oct 1st 2024, 4:23 pm
image

தேர்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட உரம் மற்றும் எரிபொருள் மானியங்களை இடைநிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் துசித பெரேரா முறைப்பாட்டைச் சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 

தேர்தல் காரணமாக முன்னாள் ஜனாதிபதி வழங்கிய சலுகைகள் இடைநிறுத்தப்பட்டதுடன், தற்போதைய ஜனாதிபதி வழங்கிய சலுகைகளும் தேர்தலின் காரணமாக இல்லாமல் போயுள்ளது.  இதனால் விவசாய மற்றும் மீனவ சமூகங்கள் மிகவும் பாதிப்படைந்து பொருளாதார ரீதியாக பின்னடைவை நோக்கி நகர்வதை எம்மால் கட்டுப்படுத்த முடியாமல் போக வாய்ப்புண்டு, என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக தொழிலாளிகளின் சலுகைகளை தடுக்காதீர்; தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் புகார் தேர்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட உரம் மற்றும் எரிபொருள் மானியங்களை இடைநிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.இது தொடர்பில் அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் துசித பெரேரா முறைப்பாட்டைச் சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தேர்தல் காரணமாக முன்னாள் ஜனாதிபதி வழங்கிய சலுகைகள் இடைநிறுத்தப்பட்டதுடன், தற்போதைய ஜனாதிபதி வழங்கிய சலுகைகளும் தேர்தலின் காரணமாக இல்லாமல் போயுள்ளது.  இதனால் விவசாய மற்றும் மீனவ சமூகங்கள் மிகவும் பாதிப்படைந்து பொருளாதார ரீதியாக பின்னடைவை நோக்கி நகர்வதை எம்மால் கட்டுப்படுத்த முடியாமல் போக வாய்ப்புண்டு, என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement