• May 04 2026

இந்திய மீனவரின் அத்துமீறலால் வாழ்வாதாரம் முற்றிலும் இழப்பு; எதிர்வரும் 12 ஆம் திகதி போராட்டத்திற்கு அழைப்பு!

shanu / Dec 8th 2025, 2:43 pm
image

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால் யாழ்.மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் இழக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 12ஆம் திகதி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 



அண்மை நாட்களாக நாகபட்டினம் - காரைக்கால் மீனவர்களின் இழுவைப்படகுகள் கரையை அண்மித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து வடமராட்சி கிழக்கு தொடக்கம் நெடுந்தீவு வரையான மீனவ சங்க பிரதிநிதிகள் யாழ். மாவட்ட நீரியல்வளத் திணைக்கள பிரதிப் பணிப்பாளரை இன்று காலை சந்தித்து  இது தொடர்பில் கலந்துரையாடினர். 


இது தொடர்பில் மீனவர்கள் தெரிவிக்கையில், 

இதன்போது கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை அரசாங்கமாக நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். தவறின் நாங்கள் கடலில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும். 


ஆனாலும் அடையாளமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து நீரியல்வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்து மாவட்டச் செயலகம் வரை செல்லவுள்ளோம். மாவட்டச் செயலகத்தை முடுக்கி எமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். என்று தெரிவித்தனர்.

இந்திய மீனவரின் அத்துமீறலால் வாழ்வாதாரம் முற்றிலும் இழப்பு; எதிர்வரும் 12 ஆம் திகதி போராட்டத்திற்கு அழைப்பு இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால் யாழ்.மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் இழக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 12ஆம் திகதி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மை நாட்களாக நாகபட்டினம் - காரைக்கால் மீனவர்களின் இழுவைப்படகுகள் கரையை அண்மித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து வடமராட்சி கிழக்கு தொடக்கம் நெடுந்தீவு வரையான மீனவ சங்க பிரதிநிதிகள் யாழ். மாவட்ட நீரியல்வளத் திணைக்கள பிரதிப் பணிப்பாளரை இன்று காலை சந்தித்து  இது தொடர்பில் கலந்துரையாடினர். இது தொடர்பில் மீனவர்கள் தெரிவிக்கையில், இதன்போது கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை அரசாங்கமாக நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். தவறின் நாங்கள் கடலில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும். ஆனாலும் அடையாளமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து நீரியல்வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்து மாவட்டச் செயலகம் வரை செல்லவுள்ளோம். மாவட்டச் செயலகத்தை முடுக்கி எமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். என்று தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement