மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆளடையாள ஆவணங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,
வாக்கெடுப்பு நிலையங்களுக்கு செல்லும் போது வாக்காளர்கள் தங்களது ஆளடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு செல்வது கட்டாயமாகும்.
அதன்படி
1. ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டை
2. செல்லுபடியான கடவுச்சீட்டு
3. செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்
4. ஓய்வூதிய திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் ஓய்வூதிய அடையாள அட்டை
5. முதியோர் அடையாள அட்டை
6. ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் மதகுருமார்களுக்காக அடையாள அட்டை
7. தேர்தல் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டை
8.தேர்தல் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்படும் விசேட தேவையுடையோருக்கான தற்காலிக அடையாள அட்டை
9. ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டைத் தகவல்களை உறுதி செய்யம் கடிதம்
10. மோட்டார் வாகன திணைக்களத்தினால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்
மேற்படி அடையாள அட்டைகளில் ஏதேனுமொன்றைச் சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில், வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டொன்று விநியோகிக்கப்பட மாட்டாது.
அதேபோல், தெளிவின்றிய அடையாள அட்டைகள், அமைச்சுக்கள்/திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் விநியோகிக்கப்பட்டுள்ள சேவை அடையாள அட்டைகள், தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்கும்போது விநியோகிக்கப்படும் பற்றுச்சீட்டுக்கள் முதலியன நிழற்படம் அடங்கிய அல்லது அடங்கியிராத வேறேதேனுமோர் ஆவணம், வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கு செல்லுபடியான அடையாள அட்டையொன்றாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்; வாக்காளர்களின் ஆவணங்கள் தொடர்பில் முக்கிய அறிவித்தல் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆளடையாள ஆவணங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, வாக்கெடுப்பு நிலையங்களுக்கு செல்லும் போது வாக்காளர்கள் தங்களது ஆளடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு செல்வது கட்டாயமாகும்.அதன்படி1. ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டை2. செல்லுபடியான கடவுச்சீட்டு 3. செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்4. ஓய்வூதிய திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் ஓய்வூதிய அடையாள அட்டை5. முதியோர் அடையாள அட்டை6. ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் மதகுருமார்களுக்காக அடையாள அட்டை7. தேர்தல் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டை8.தேர்தல் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்படும் விசேட தேவையுடையோருக்கான தற்காலிக அடையாள அட்டை9. ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டைத் தகவல்களை உறுதி செய்யம் கடிதம்10. மோட்டார் வாகன திணைக்களத்தினால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்மேற்படி அடையாள அட்டைகளில் ஏதேனுமொன்றைச் சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில், வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டொன்று விநியோகிக்கப்பட மாட்டாது.அதேபோல், தெளிவின்றிய அடையாள அட்டைகள், அமைச்சுக்கள்/திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் விநியோகிக்கப்பட்டுள்ள சேவை அடையாள அட்டைகள், தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்கும்போது விநியோகிக்கப்படும் பற்றுச்சீட்டுக்கள் முதலியன நிழற்படம் அடங்கிய அல்லது அடங்கியிராத வேறேதேனுமோர் ஆவணம், வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கு செல்லுபடியான அடையாள அட்டையொன்றாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. என அறிவிக்கப்பட்டுள்ளது.