உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதிக்குப் பின்னர் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலே தற்போது நடத்தப்படவுள்ளது.
அந்த தேர்தலுக்கு சுமார் 161 மில்லியன் ரூபாய் வரையில் கட்டுப்பணமாக பெறப்பட்டிருந்தது.
அவற்றில் 75 வீதத்துக்கும் அதிகமானவை மீள செலுத்தப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலுக்கான செலவு 11 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களைப் போலவே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்கள்
மற்றும் கட்சிக்கான செலவு வரம்புகள் நிர்ணயிக்கப்படவுள்ளன.
இதனிடையே, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து 35 முதல் 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலை நடத்தக் கூடியதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 25க்கு பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தத் திட்டம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதிக்குப் பின்னர் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். 2023 ஆம் ஆண்டில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலே தற்போது நடத்தப்படவுள்ளது. அந்த தேர்தலுக்கு சுமார் 161 மில்லியன் ரூபாய் வரையில் கட்டுப்பணமாக பெறப்பட்டிருந்தது. அவற்றில் 75 வீதத்துக்கும் அதிகமானவை மீள செலுத்தப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலுக்கான செலவு 11 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களைப் போலவே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிக்கான செலவு வரம்புகள் நிர்ணயிக்கப்படவுள்ளன. இதனிடையே, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து 35 முதல் 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலை நடத்தக் கூடியதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.